5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

செல்ஃபி மோகம்.. இளம்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.. கடைசியில் என்னாச்சு?

ஹைதராபாத்தில் குடும்பத்துடன் செல்ஃபி எடுத்தபோது கால்வாயில் இளம்பெண் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கால்வாயில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இளம்பெண் 45 நிமிடம் போராடி பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடாவுக்கு ஒரு குடும்பத்தினர் நேற்றுமுன் தினம் மாலை காரில் சென்றனர்.

செல்ஃபி மோகம்.. இளம்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.. கடைசியில் என்னாச்சு?
கீழே விழுந்த இளம்பெண்
umabarkavi-k
Umabarkavi K | Published: 01 Sep 2024 15:46 PM

இளம்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்: ஹைதராபாத்தில் குடும்பத்துடன் செல்ஃபி எடுத்தபோது கால்வாயில் இளம்பெண் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடாவுக்கு ஒரு குடும்பத்தினர் நேற்றுமுன் தினம் மாலை காரில் சென்றனர். செல்லும் வழியில் நல்கெண்டா மாவட்டம் வெமுல பள்ளியில் நாகார்ஜூனா சாகர் அணையின் இடது கரை கால்வாயில் காரை நிறுத்தினர். இந்த கால்வாயில் கடந்த சில வாரங்களாக தண்ணீர் சீற்றத்துடன் செல்கிறது. இதனை கண்ட குடும்பத்தினர் கார் நிறுத்தி அங்கு நின்று அதனை கண்டு ரசித்தனர். அப்போது அந்த குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வெமுலப் பள்ளி பாலத்தில் உள்ள இடது கால்வாய் அருகே செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது குடும்பத்தினர் அனைவரையும் நிற்க வைத்த அவர், செல்ஃபி எடுக்க முயன்றபோது, அவர் திடீரென கால் தவறி தண்ணீரில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டார்.

Also Read: மீண்டும் அதிர்ச்சி.. மருத்துவமனையில் நர்ஸுக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ந்த கொல்கத்தா!

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கூச்சலிட்டனர். உடனடியாக இதை கவனித்த அப்பகுதி மக்கள் கால்வாயில் குதித்து அந்த பெண்ணை கயிற்றால் கட்டி சுமார் 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மேலே கொண்டு வந்தனர். தண்ணீரில் விழுந்த பெண்ணுக்கு காயங்கள் ஏதும் இல்லாததால் அனைவரும் நிம்மதி அடைந்தனர் . இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹைதராபாத்தில் பரபரப்பு:

முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தில் உள்ள காட் பகுதியில், 29 வயது இளம் பெண் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவர் தவறி 60 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், கயிறு மூலம் இளம் பெண்ணை காப்பாற்றினர். இந்த நிலையில், கயிறு மூலம் இளம் பெண் பள்ளத்தில் இருந்து மேலே அழைத்துவரப்படும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலானது.

Also Read: ”மாட்டுக்கறி இருக்கா?” முஸ்லீம் முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்.. ஓடும் ரயிலில் பரபரப்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்வி காம்தார் என்ற 27 வயது இளம் பெண், தனது நன்பர்களுடன் சுற்றுலா சென்றார். சமூக ஊடக இன்ஃபுளூயன்சர் ஆன அவர், செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவர் கால் இடறி சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த ஆன்வி, சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் ஆன்வியின் உடலை மீட்டு மேலே கொண்டுவந்தனர். இந்த சம்பவம் அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதே போல மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News