Ram Mandir: வந்தாச்சு குளிர்காலம்.. அயோத்தி ராமருக்கு தயாராகும் கம்பளி உடைகள்!
Ram Janmabhoomi: டெல்லியைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர்களான வடிவமைக்கப்பட்ட கம்பளி ஆடைகள், போர்வைகள் ஆகியவை வரும் நவம்பர் 20 ஆம் தேதி அகன் பஞ்சமி அன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு போர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் குளிர்ந்த மாதங்கள் முடியும் வரை இந்த கம்பளி ஆடைகள், பஷ்மினா சால்வைகள் என அனைத்தும் டெல்லியில் இருந்து அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
அயோத்தி ராமர் கோயில்: குளிர்காலம் நெருங்கி வருவதால், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் உள்ள குழந்தை ராமருக்கு என பிரத்யேகமாக கம்பளி உடைகள் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் கருவறையில் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர்களான வடிவமைக்கப்பட்ட கம்பளி ஆடைகள், போர்வைகள் ஆகியவை வரும் நவம்பர் 20 ஆம் தேதி அகன் பஞ்சமி அன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு போர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் குளிர்ந்த மாதங்கள் முடியும் வரை இந்த கம்பளி ஆடைகள், பஷ்மினா சால்வைகள் என அனைத்தும் டெல்லியில் இருந்து அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குழந்தை ராமருக்கு படைக்கப்படும் பிரசாதமான தயிர் சாதம் நிறுத்தப்படுகிறது. அதற்கு பதிலாக குளிர் காலத்தில் பாரம்பரிய இந்திய இனிப்புகளான ரப்டி கீர் (பால் மற்றும் சர்க்கரை சேர்க்க்கப்பட்ட அரிசியை வேகவைத்து தயாரிக்கப்படும் ஒரு அரிசி புட்டு) மற்றும் உலர் பழங்கள் ஆகியவை வானிலை மாற்றத்திற்கு ஏற்ப வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Varahi Amman: காளியின் சொரூபம்… வாராகி அம்மனை வீட்டில் வைத்து வணங்கலாமா?
தினசரி வழிபாட்டில் செய்யப்படும் மாற்றம்
இப்படியான நிலையில் கோயிலில் குழந்தை ராமர் கருவறையிலும் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக அயோத்தி ராமஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளரான ஓம்கார் சிங் கூறுகையில், “குளிர்காலம் தொடங்கியவுடன் குழந்தை ராமரை வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்ட வேண்டும். அதுமட்டுமல்லாமல் கருவறையில் சூடான பருவநிலையை பராமரிக்க ஹீட்டர்கள் நிறுவப்படும். கடுமையான குளிர் கால நாட்களில் குழந்தை ராமர் மீது வீச ஒரு சூடான காற்று வீசும் கருவியும் நிறுவப்படும்.குழந்தை வடிவில் சித்தரிக்கப்பட்ட ராமர் இந்த காலக்கட்டத்தில் இளவரசராக பிரதிபலிக்கும் வகையில் ஆடைகளை அணிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தாமதமாகும் கோயில் பணிகள்
அயோத்தி ராமர் கோயிலுக்கான பணிகள் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிவடையும் வகையில் நடந்து வந்தது. இந்த நிலையில் தற்போது அது அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமான குழுவின் தலைவரான நிருபேந்திர மிஸ்ரா அளித்துள்ள தகவல்படி சுமார் 200 பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் பணிகள் முடிவடைவது தள்ளிப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும் கோயிலில் முதல் தளத்தில் சில கற்கள் மாற்ற வேண்டியது உள்ளதால் தாமதமாவதாகவும்அவர் கூறியுள்ளார்.
Also Read: Sabarimala: பெரிய வழி vs சிறிய வழி .. ஐயப்பனை காண எது சிறந்தது?
அயோத்தி ராமர் கோயில்
நீண்ட காலமாக அயோத்தி நிலம் தொடர்பாக நடந்து வந்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோதியில் மிக பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இக்கோயிலின் திறப்பு விழா கடந்த ஜனவரி 22ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்தனர். ஒட்டுமொத்த இந்திய மக்களின் பார்வையும் அயோத்தி ராமர் கோயில் மீது இருந்தது.
7000க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து அரசியல்,சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பங்கேற்றனர். அயோத்தி ராமர் கோயிலில் கருவறையில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 51 அடி உயரமுள்ள அந்த சிலையை அருண் யோகிராஜ் என்ற சிற்பி வடிவமைத்துள்ளார்.
Also Read: Sabarimala: சபரிமலை போகும் பக்தர்களுக்கு சிக்கல்.. இந்த தப்பை பண்ணாதீங்க!
மேலும் கருவறையில் 24 கேரட் தங்கத்தால் ஆன மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 10 தங்க விலக்குகளும் அந்த கருவறையில் குழந்தை ராமரை அழகாக காட்சிப்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படியான அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிகள் முழுவதும் முடிவடையாமல் தேர்தலை மனதில் வைத்து அவசர அவசரமாக திறக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டினர்.
இப்படியான நிலையில் அயோத்திக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அங்கு பக்தர்கள் பாதுகாப்புக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.