”தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான INDI கூட்டணி” செங்கோல் விவகாரத்தில் முதல்வர் யோகி கண்டனம்! - Tamil News | | TV9 Tamil

”தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான INDI கூட்டணி” செங்கோல் விவகாரத்தில் முதல்வர் யோகி கண்டனம்!

Published: 

27 Jun 2024 16:17 PM

18வது மக்களவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் செங்கோல் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் செங்கோலுக்கு பதில் இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வைக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி எம்.பி ஆர்.கே. சௌத்ரி கோரிக்கை வைத்துள்ளார். இந்த விவாகரம் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் வார்த்தை போராக மாறியுள்ள நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா சமாஜ்வாதி எம்பியின் கோரிக்கையை நிராகரித்தார்.

”தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான INDI கூட்டணி” செங்கோல் விவகாரத்தில் முதல்வர் யோகி கண்டனம்!

உ.பி. முதல்வர்

Follow Us On

செங்கோல் விவகாரம்: 18வது மக்களவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் செங்கோல் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் செங்கோலுக்கு பதில் இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வைக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி எம்.பி ஆர்.கே. சௌத்ரி கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், “அரசியலமைப்பு என்பது ஜனநாயகத்தின் சின்னம். ஆனால், பாஜக கடந்த ஆட்சியில் நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவியது. செங்கோல் என்பது மன்னரின் கையில் இருக்கும் தடி. மன்னராட்சிக்கு பிறகு நாம் சுதந்திரமடைந்துவிட்டோம். இப்போது வாக்களிக்க தகுதியான ஆணும், பெண்ணும் நாட்டை வழிநடத்தும் அரசை தேர்வு செய்கிறார்கள்.

Also Read: ரூ.3.3 லட்சம் சம்பளம்.. அரசு பங்களா..எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு கிடைக்கும் சலுகைகள்!

உ.பி.முதல்வர் கண்டனம்:

இப்போது நாடு மன்னரின் தடியால் இயங்குமா, அரசியலமைப்பின் படி இயங்குமா.. எனவே ஜனநாயகத்தை காப்பாற்ற செங்ககோலை எடுத்துவிட்டு அரசியலமைப்பை நிறுவ வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். இந்த விவாகரம் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் வார்த்தை போராக மாறியுள்ள நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா சமாஜ்வாதி எம்பியின் கோரிக்கையை நிராகரித்தார். இந்த நிலையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். அதன்படி, “இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை.


‘செங்கோல்’ பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான INDI கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது. ‘செங்கோல்’ இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. மாண்புமிகு பாரத பிரதமர் மோடி  அவர்கள் பாராளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார்” என குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில், “செங்கோல்’ நிறுவப்பட்டபோது, ​​பிரதமர் அதற்கு தலைவணங்கினார். ஆனால் இந்த முறை பதவிப்பிரமாணம் செய்யும்போது அவர் தலைவணங்க மறந்துவிட்டார். எனவே, அதை பிரதமருக்கு நினைவூட்டவே இப்படி எங்கள் எம்.பி. சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்” என்றார்.

Also Read: மருத்துவமனையில் சிகிச்சை.. எல்.கே அத்வானி உடல்நிலை எப்படி இருக்கு?

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version