”வயநாடு மக்களின் அளவற்ற அன்பு” ராகுல் காந்தி எழுதிய உருக்கமான கடிதம்!
வயநாடு தொகுதி மக்களுக்கு ராகுல் காந்தி நேற்று உணர்வுப்பூர்வமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "நான் வயநாடு தொகுதிக்கு புதியவமான இருந்தும் என்னை நீங்கள் நம்பினீர்கள். அளவற்ற அன்புடனும் பாசத்துடனும் என்னைத் அரவணைத்து கொண்டீர்கள். நீங்கள் எந்த அரசியல் உருவாக்கத்தை ஆதரித்தீர்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர், எந்த மதத்தை நம்புகிறீர்கள் அல்லது எந்த மொழியில் பேசுகிறீர்கள் என்பது முக்கியமல்ல" என்றார்.
ராகுல் காந்தி உருக்கமாக கடிதம்: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டையும் கைப்பற்றினார். ரேபரேலி தொகுதியில் 6.87 லட்ச வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜகவின் தினேஷ் பிரதாப் சிங்கை விட சுமார் 2.97 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ராகுல் காந்தி. அதேபோல, வயநாடு தொகுதியில் 6.47 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மூத்த இடதுசாரி தலைவர் ஆனிராஜவை தோற்கடித்தார் ராகுல் காந்தி. வென்ற 2 தொகுதிகளில் ஒன்றை விட்டுக்கொடுக்க கொடுக்க வேண்டிய கட்டாயம் என்பதால் அவர் வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரேபரேலி தொகுதியை தக்க வைத்தார். அதேசமயம், வயநாடு தொதியில் அவரது சகோதரியும், கட்சியின் பொதுச் செயலாளருமான பிரயங்காவை களமிறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், வயநாடு தொகுதி மக்களுக்கு ராகுல் காந்தி நேற்று உணர்வுப்பூர்வமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், “நான் வயநாடு தொகுதிக்கு புதியவமான இருந்தும் என்னை நீங்கள் நம்பினீர்கள். அளவற்ற அன்புடனும் பாசத்துடனும் என்னைத் அரவணைத்து கொண்டீர்கள். நீங்கள் எந்த அரசியல் உருவாக்கத்தை ஆதரித்தீர்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர், எந்த மதத்தை நம்புகிறீர்கள் அல்லது எந்த மொழியில் பேசுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு நாளும் நான் அவமதிப்பை எதிர்கொண்டபோது உங்களின் நிபந்தனையற்ற அன்புதான் என்னை பாதுகாத்தது. நீங்கள் தான் எனக்கு அடைக்கலமாக, குடும்பமாக, வீடாக இருந்தீர்கள்.
Also Read: நாடாளுமன்றத்தில் காத்திருக்கும் சம்பவம்.. ஜூன் 25ல் பதவியேற்கும் தமிழக எம்.பிக்கள்!
”வயநாடு மக்களுக்காக எப்போது இருப்பேன்”
நீங்கள் என்ன சந்தேகித்ததாக நான் ஒரு கணம் கூட உணரவில்லை. நீங்கள் எனக்கு அளித்த எண்ணற்ற அன்புகளை நான் எப்போது நினைவில் கொள்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு உண்மையான அன்பையும் மென்மையையும் கொடுத்தீர்கள். வயநாட்டில் நான் ஆற்றும் உரைகளை ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் இளம் சிறுமிகள் மொழிபெயர்த்து பேசும் துணிச்சல், அழகு மற்றும் நம்பிக்கையை மறக்க முடியாது. எனக்கு மிகவும் தேவைப்படும்போது நீங்கள் கொடுத்த அன்பு மற்றும் பாதுகாப்பிற்காக உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் என் குடும்பத்தின் ஒரு அங்கமாக இருக்கிறீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்காக நான் எப்போதும் இருப்பேன்.
ரேபரேலி மக்களில் எனக்கு ஒரு அன்பான குடும்பம் மற்றும் நான் ஆழமாக மதிக்கும் ஒரு பிணைப்பு இருப்பதால் நான் ஆறுதல் அடைகிறேன். உங்களுக்கும் ரேபரேலி மக்களுக்கும் எனது முக்கிய அர்ப்பணிப்பு கோரிக்கை என்னவென்றால், நாட்டில் பரப்பப்படும் வெறுப்பு மற்றும் வன்முறையை எதிர்த்துப் போராடி தோற்கடிப்போம்” என குறிப்பிட்டிருந்தார்.
Also Read: உச்சக்கட்ட எதிர்பார்ப்பு.. இன்று கூடுகிறது 18வது மக்களவை கூட்டத்தொடர்!