Crime News : 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. கொடூரமாக கொன்ற இளைஞர்.. அதிர்ச்சி காரணம்!
ஒடிசாவில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணப் பிரச்னையில் இளைஞர் ஒருவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒடிசாவில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணப் பிரச்னையில் இளைஞர் ஒருவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒடிசா மாநிலம் பராக் மாவட்டம் மகுல்பாலி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கும் இடையே பணப்பிரச்னை நிலவி வந்தது. இதனால், அந்த நபரின் 4 வயது மகள் தனது தோழிகளுடன் சேர்ந்து குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு சென்ற பிரசாந்த் சிறுமிகளடன் இருந்தவர்களை வீட்டிற்கு செல்லும்படி அனுப்பி வைத்தார்.
4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை
பின்னர், அந்த சிறுமியை மட்டும் ஏமாற்றி அருகில் இருந்த வனப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் சிறுமியை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.
அதாவது, சிறுமியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். பின்னர், சிறுமியின் தலை மற்றும முகத்தை கல்லால் கொடூரமாக சிதைத்து அங்கேயே வீசி விட்டு சென்றிருக்கிறார். இதற்கிடையில், தனது மகளைக் காணாமல் சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினார்கள்.
ஆனால், சிறுமி கிடைக்கவில்லை. இதனால் காவல்நிலையத்தில் சிறுமி காணாமல் போனதாக புகார் அளித்தனர். இதனால், கடைசியாக பிரசாந்த சிறுமியை சந்தித்தது தெரியவந்ததை அடுத்து, அவர் மீது சந்தேகப்பட்ட பெற்றோர் உடனே போலீசாரிடம் கூறினர்.
Also Read : ஸ்டெர்லைட் ஆலை நிரந்தர மூடல்.. மறுஆய்வு மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன?
கல்லால் தலையில் அடித்து சிதைத்த கொடூரம்
இதனால் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து, அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
சிறுமியின் உடல் மஹுல்பலி கிராமத்திற்கு அருகில் உள்ள காட்டில் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து, சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில், சிறுமி முதலில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து எஸ்பி மீனா கூறுகையில், ”பண தகராறு காரணமாக தான் சிறுமியை கொலை செய்ததாக குற்றவாளி பிரசாந்த் கூறினார். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றார்.
Also Read : வீட்டுக்கு ஏன் சிக்கன்? தம்பியை கொடூரமாக கொன்ற அண்ணன்.. வேடிக்கை பார்த்த தாய்!
தொடரும் கொடூரங்கள்:
நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெண்கள், குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் தொடந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகளும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், வன்முறை சம்பவங்கள் நின்றபாடில்லை. எனவே, இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.