5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video: ஹைதராபாத் சாலையில் கொட்டிய பண மழை.. இளைஞர் செயலுக்கு குவியும் கண்டனம்!

சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட நிலையில் சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமில்லாமல் பயன்படுத்தி வருகின்றனர். முதலில் லைக்ஸ் மற்றும் பிரபலமாகும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கியவர்கள் இன்றைக்கும் அதன் மூலம் வருமானம் பெறும் யுக்தியை தெரிந்துக் கொண்டு அதற்காக ஆபத்தான செயல்கள், முகம் சுழிக்க வைக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Viral Video: ஹைதராபாத் சாலையில் கொட்டிய பண மழை.. இளைஞர் செயலுக்கு குவியும் கண்டனம்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 23 Aug 2024 15:42 PM

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் யூடியூப் தளத்தில் அதிக லைக்குகள் பெறுவதற்காக இளைஞர் ஒருவர் பணத்தை சாலையில் வாரி இறைத்த சம்பவம் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட நிலையில் சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமில்லாமல் பயன்படுத்தி வருகின்றனர். முதலில் லைக்ஸ் மற்றும் பிரபலமாகும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கியவர்கள் இன்றைக்கும் அதன் மூலம் வருமானம் பெறும் யுக்தியை தெரிந்துக் கொண்டு அதற்காக ஆபத்தான செயல்கள், முகம் சுழிக்க வைக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சமையல் குறிப்பு தொடங்கி உடை, உணவு, ஆரோக்கியம், மருத்துவம், சினிமா, தாம்பத்ய உறவு குறித்த சந்தேகங்கள் என அனைத்தும் யூட்யூப் தளத்தில் வீடியோவாக பதிவிடப்படுகிறது. இப்படியான நிலையில் தான் ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் கண்டனத்தைப் பெற்றுள்ளது.

Also Read: Muthamizh Murugan Maanadu: முத்தமிழ் முருகன் மாநாடு..பழனியில் குவியும் பக்தர்கள்..!

அந்நகரின் குகட்பல்லியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. Youtube தளத்தின் பிரபலமானவராக திகழும் மகாதேவ் என்பவர் தான் இந்த வீடியோவை எடுத்துள்ளார். அவர் பைக்கின் பின்னால் முதலில் அமர்ந்தவாறு வரும் நிலையில் குறிப்பிட்ட இடம் வந்ததும் சீட்டில் இருந்து எழுந்து கையில் வைத்திருந்த பணத்தை தூக்கி வீசி எறிந்து விட்டு செல்கிறார். அதனை முன்னால் வாகனத்தில் இருந்து வீடியோ எடுக்கிறார்கள்.

மகாதேவ் சென்ற பைக் கேமராவில் இருந்து விலகியதும் சுற்றி இந்த மக்கள் சிதறிய பணத்தை ஆர்வமுடன் எடுக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. சிதறிய பணத்தை அங்கு நின்றிருந்த மக்கள் மட்டும் இல்லாமல் போக்குவரத்து மிகுந்த அந்த சாலையில்  வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்களும் ஒரு ஓரமாக தங்கள் வண்டிகளை நிறுத்திவிட்டு இறங்கி வந்து எடுத்துச் சென்றனர்.

Also Read: Health Tips: திருமணத்திற்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள்.. இது செக்ஸ் வாழ்க்கைக்கு உதவும்!

இதோடு மட்டுமல்லாமல் தான் வீசும் பணம் எவ்வளவு என்பதை சரியாக சொல்லும் நபருக்கு பரிசுகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூகவலைகளில் பதிவிட்டுள்ள மகாதேவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.  பொது இடத்தில் அத்துமீறி பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் செயல்களை செய்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரை பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  Youtube இல் அதிகம் லைக்குகளை பெறுவதற்காக மக்களை இப்படி முட்டாளாக காட்ட வேண்டாம் என பலரும் சமூக வலைத்தளம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest News