Crime: நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர்.. வீடியோ எடுத்த மக்கள்
Andhrapradesh: ஆந்திர மாநிலம் அரக்கர்களின் ஆட்சியில் உள்ளது.சட்டம் ஒழுங்கு எங்கும் இல்லை.ஆந்திர மக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை ஒடுக்கும் நோக்கத்தில் இந்தக் கொடுமைகள் செய்யப்படுகின்றன. புதிய அரசு பதவியேற்ற ஒன்றரை மாதங்களிலேயே கொலை,பாலியல் வன்கொடுமை, அரசியல் பழிவாங்கல், போன்ற சம்பவங்கள் நடக்கும் மாநிலமாக ஆந்திரா மாறிவிட்டது.
ஆந்திராவில் நடுரோட்டில் டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பல்நாடு மாவட்டத்தில் இருக்கும் விணுகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் ரஷீத். 25 வயதான இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இளைஞரணி நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் முண்டலாமுரு பேருந்து நிலையம் அருகே செயல்படும் அரசு மதுபான கடையில் சூப்பர்வைசராகவும் செயல்பட்டு வருகிறார். இதனிடையே சமீபத்தில் தான் ஆந்திர மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று தெலுங்குதேசம் கட்சி அபார வெற்றி பெற்றது. இந்த தேர்தலுக்கு முன்பாக ஷேக் ரஷீத்துக்கும், அவரது நண்பரான ஷேக் ஜிலானி என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.அந்த சண்டையில் ரஷீத், ஜிலானியின் வீட்டுக்கே சென்று அவருடைய பைக்கை தீவைத்து எரித்துள்ளார்.
நடுரோட்டில் வெட்டிக்கொலை
இப்படியான நாளுக்கு நாள் ஷேக் ரஷீத் மற்றும் ஷேக் ஜிலானி இடையே கடுமையான கருத்து வேறுபாடும், பகையும் நிலவி வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல ரஷீத் டாஸ்மாக் கடையில் பணி முடித்து விட்டு வீட்டுக்கு செல்ல தயாராகியுள்ளார். அப்போது அங்கு வந்த ஷேக் ஜிலானி ரஷீத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது உச்சக்கட்டத்துக்கு செல்ல ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற ஜிலானி மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஷீத்தை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் முதலில் ரஷீத்தின் கை துண்டாகி விழுந்தது.இதனால் வலியால் அலறி துடித்த அவர், உயிருக்கு பயந்து ஓட முற்பட்டார்.ஆனால் ஜிலானி நடுரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை சுற்றியிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். ஆனால் யாரும் தடுக்க முன்வரவில்லை.
அதிகம் ரத்தம் வெளியேறியதால் ரஷீத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஷேக் ஜிலானி அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் ரஷீத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஷேக் ஜிலானியை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஷேக் ரஷீத் கொலை செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Also Read: மேனேஜர்கள் என்னை பயன்படுத்திக்கொண்டனர்… நடிகை ஷாலினி பாண்டே வேதனை
இந்நிலையில் ஷேக் ரஷீத் கொலை செய்யப்பட்டதற்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் வலைப்பதிவில், “ஆந்திர மாநிலம் அரக்கர்களின் ஆட்சியில் உள்ளது.சட்டம் ஒழுங்கு எங்கும் இல்லை.ஆந்திர மக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை ஒடுக்கும் நோக்கத்தில் இந்தக் கொடுமைகள் செய்யப்படுகின்றன.
புதிய அரசு பதவியேற்ற ஒன்றரை மாதங்களிலேயே கொலை,பாலியல் வன்கொடுமை, அரசியல் பழிவாங்கல், போன்ற சம்பவங்கள் நடக்கும் மாநிலமாக ஆந்திரா மாறிவிட்டது. வினுகொண்டாவில் நேற்று நடந்த கொடூர கொலையே இதற்கு உதாரணம். ஆந்திரப் பிரதேச முதல்வர்மற்றும் பிற பொறுப்புள்ள அதிகாரிகள் தெளிவான அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இத்தகைய அட்டூழியங்களை ஊக்குவிக்கின்றனர். இதனால், குற்றவாளிகளும் கொலையாளிகளும் சுதந்திரமாக உலா வருகின்றனர். புதிய அரசு பதவியேற்ற பிறகு நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து மத்திய அரசு அமைப்புகள் சிறப்பு விசாரணை நடத்த வேண்டும். பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்வெட்டிக் கொல்லப்பட்ட ரஷீத்தின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.