5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TNPSC Group 2 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு தேதி அறிவிப்பு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. எப்படி?

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த நிலையில், குரூப் 2, 2ஏ  பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.  குரூப் 2 தேர்வு மூலம் மொத்தம் 2,030 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி, குரூப் 2 பிரிவில் காலியாக உள்ள 1,820 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  குரூப் 2 ஏ பிரிவில் 507 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி குரூப் 2,2ஏ தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் இன்று தொடங்கி வரும் ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்துவதற்கும் ஜூலை 19ஆம் தேதியை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 2 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு தேதி அறிவிப்பு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. எப்படி?
டிஎன்பிஎஸ்சி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 20 Jun 2024 12:07 PM

குரூப் 2 தேர்வு எப்போது? தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த நிலையில், குரூப் 2, 2ஏ  பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.  குரூப் 2 தேர்வு மூலம் மொத்தம் 2,030 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி, குரூப் 2 பிரிவில் காலியாக உள்ள 1,820 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  குரூப் 2 ஏ பிரிவில் 507 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி குரூப் 2,2ஏ தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் இன்று தொடங்கி வரும் ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்துவதற்கும் ஜூலை 19ஆம் தேதியை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: குரூப் 4 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. வெளியானது விடைக் குறிப்பு!

தேர்வுக்கான தகுதி:

குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவரது வயது 26க்கு குறைவாகவோ அல்லது 30 அல்லது 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

www.tnpsc.gov.in தேர்வர்கள் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் தேர்வாணையை இணையதளத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு தளத்தில் OTR பதிவு செய்த பின்பு இத்தேர்விற்கான விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும். தேர்வர்கள் ஏற்கனவே ஒருமுறைப்பதிவு பதிவு செய்திருப்பின், அவர்கள் இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்ப திருத்தம்:

இணைவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளுக்கு பின்னர், விண்ணப்பத் திருத்தத்தை ஜூலை 14ஆம் தேதி முதல் 26ஆம் தேதிக்குள் மேற்கொள்ளலாம். மூன்று நாட்கள் மட்டுமே விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை திருத்தம் செய்ய இயலும்.

விண்ணப்ப கட்டணம்:

குரூப் 2,2ஏ தேர்வுகளை எழுத ஆன்னைனில் விண்ணப்பிப்பவர்கள் ரூ.150 செலுத்த வேண்டும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேக்கிங், யுபிஐ மூலம் கட்டண தொகையை காலக்கெடுவிற்குள் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in இந்த லிக்கை க்ளிக் செய்ய வேண்டும்.

Also Read: 9 லட்சம் பேர் எழுதிய நெட் தேர்வு ரத்து… மத்திய அரசு அறிவிப்பு.. காரணம் என்ன?