5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கிழக்கு ரயில்வே ஆட்சேர்ப்பு.. 60 பணியிடங்கள்.. உடனே முந்துங்க!

Eastern Railways Recruitment : கிழக்கு ரயில்வேயில் ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 60 பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் நவ.15ஆம் தேதி தொடங்கிவிட்டன.

கிழக்கு ரயில்வே ஆட்சேர்ப்பு.. 60 பணியிடங்கள்.. உடனே முந்துங்க!
கிழக்கு ரயில்வேயில் ஆட்சேர்ப்பு
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 20 Nov 2024 17:12 PM

இந்திய ரயில்வேயின், கிழக்கு ரயில்வே பிரிவில் குரூப் சி மற்றும் டி பதவிகளுக்கான விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிகள் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 60 பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கு, தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் rrcrecruit.co.in மற்றும் அதிகாரப்பூர்வ RRC/ER இணையதளமான rrcer.org வழியாக விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி காலக்கெடு டிசம்பர் 14, 2024 ஆகும். இதற்கான விண்ணப்பங்கள் நவ.15ஆம் தேதி தொடங்கப்பட்டுவிட்டன.

பணி இடங்கள்

குரூப் சி லெவல் 4 மற்றும் 5 – 5 பணி இடங்கள்
குரூப் சி லெவல் 2 மற்றும் 3- 16 பணி இடங்கள்
குரூப் டி லெவல் 1 – 39 பணி இடங்கள்

விண்ணப்ப கட்டணம்

அனைத்து விண்ணப்பதாரர்களும் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :  சவூதி அரேபியாவில் நர்ஸ் ஆக பணிபுரிய விருப்பமா? இது உங்களுக்குதான்!

வயது சான்று

ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும் போது, ​​விண்ணப்பதாரர்கள் தங்களின் வயதுச் சான்று சான்றிதழ்களின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும். வயது சான்றிதழுக்கு மெட்ரிகுலேஷன் அல்லது 10ஆம் வகுப்பு சான்றிதழ் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும், வயதுச் சான்று சான்றிதழின் அசல் நகலை சோதனை நாளில் ஆவணச் சரிபார்ப்பின் போது சமர்பிக்க வேண்டும்.

வயது தகுதி

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எந்த பிரிவினருக்கும் வயது தளர்வு கிடையாது.

கல்வித் தகுதி

நிலை 4 மற்றும் நிலை 5 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டதாரிகளாக இருக்க வேண்டும்.
இதேபோல், ஒரு விண்ணப்பதாரர் நிலை 2 அல்லது நிலை 3 பதவிகளுக்கு விண்ணப்பிக்க 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் பயிற்சிப் படிப்பை முடித்திருந்தால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். நிலை 1 பதவிகளுக்கான விண்ணப்பதாரர்கள் ஐடிஐ மற்றும் 10 ஆம் வகுப்பு இரண்டையும் முடித்திருக்க வேண்டும்.

இதர விவரங்கள்

மேலும் விளையாட்டு துறைகளில் பதக்கங்கள் வென்றிருந்தால் அது முக்கிய காரணியாக பார்க்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில் செயல்திறன் அடிப்படையில் தேர்வு செயல்முறையின் போது 50 புள்ளிகள் வழங்கப்படும்.

மேலும், தடகள திறமை மற்றும் உடல் தகுதிக்காக 40 புள்ளிகள் வழங்கப்படும். கல்வித் தகுதிக்கு, பத்து புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சம்பளம் உள்ளிட்ட விவரங்களை கிழக்கு ரயில்வே இணைய முகவரி்க்கு சென்று பார்வையிட்டு தெரிந்துக் கொள்ளவும்.

இதையும் படிங்க : ஐ.டி.ஐ, டிப்ளமோ கல்வித் தகுதி.. இந்திய விமானப் படையில் அப்ரெண்டிஸ் பணிக்கு அழைப்பு!

Latest News