5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இன்ஜினியரிங் படித்தீர்களா? விமானத்துறையில் வேலை – உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய விமான நிலையங்களில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஜினியரிங் படித்தீர்களா? விமானத்துறையில் வேலை – உடனே அப்ளை பண்ணுங்க!
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 30 Apr 2024 15:21 PM

இந்திய விமான நிலையங்களில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 490 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளைளே கடைசி நாளாகும்.

பணி விவரம்:

ஜூனியர் உதவியாளர் (Architecture) – 03

ஜூனியர் உதவியாளர் (Engineering Civil)- 90

ஜூனியர் உதவியாளர் (Engineering electrical) – 106

ஜூனியர் உதவியாளர் (Electronics) _ 278

ஜூனியர் உதவியாளர் (Information Technology) – 13

மொத்த பணியிடங்கள் – 490

கல்வித்தகுதி:

ஜூனியர் உதவியாளர் பணிக்கு 10,12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், மூன்றாண்டு பொறியியல் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிவில், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், ஐடி துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.05.24-யின் அடிப்படையில் அதிகபட்ச வயது 27க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு மாத சம்பளம் ரூ.14,000 முதல் ரூ.40,000 வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

  • மேற்கண்ட பணியிடங்களுக்கு https://www.aai.aero/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • இந்த லிக்கில் Careers என்ற ஆப்ஷனை கிளிக் செய்ததம் விண்ணப்ப படிவம் தோன்றும்.
  • அந்த விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி, விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

பணி குறித்த கூடுதல் விவரங்களுக்கு இந்த  https://www.aai.aero/ லிக்கை கிளிக் செய்ய வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு ரூ.300, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (01.05.24) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.