ஐ.டி.பி.ஐ வங்கியில் அக்ரி ஆபீஸர் பணி.. விண்ணப்பித்து விட்டீர்களா?
Agri Officer Job at IDBI Bank : ஐ.டி.பி.ஐ வங்கியில் சிறப்பு அக்ரி ஆபீஸர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க நவ.30ஆம் தேதி கடைசியாகும்.
ஐ.டி.பி.ஐ வங்கியில், 500 இளநிலை உதவி மேலாளர்கள் காலியிடங்கள் மற்றும் 100 ஸ்பெஷலிஸ்ட் அக்ரி அசெட் ஆபீசர்ஸ் காலியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் idbibank.in இன் அதிகாரப்பூர்வ இணையத்தை பார்வையிடவும். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி நவ.30, 2024 ஆகும். இந்தப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் நடத்தப்படும்.
விண்ணப்ப கட்டணம்
எஸ்.சி, எஸ்.டி மாற்றுத்திறனாளிகள் ரூ.250
பொது, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் ரூ.1,050
இந்தக் கட்டணங்களை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.
வயது தகுதி
விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் 25 வயதுக்குள் இருத்தல் வேண்டும். அதாவது, அக்.2, 1999க்கு பின்னரும் அக்.1, 2024க்கு முன்னரும் பிறந்திருக்க வேண்டும். இதில் எஸ்.சி, எஸ்டி.க்கு 5 ஆண்டுகளும், ஒ.பி.சிக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் இராணுவத்தினருக்கு 5 ஆண்டுகளும் அதிகப்பட்சமாக வயது தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மீன்வள அறிவியல்/பொறியியல், கால்நடை பராமரிப்பு, கால்நடை அறிவியல், வனவியல், பால் அறிவியல்/தொழில்நுட்பம், உணவு அறிவியல்/தொழில்நுட்பம், மீன் வளர்ப்பு, வேளாண் வனவியல் ஆகியவற்றில் 4 ஆண்டு பட்டம் (B.Sc/B Tech/B.E) அரசு / அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட டிகிரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இதையும் படிங்க : இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி.. எழுத்து தேர்வு இல்லை.. மாதச் சம்பளம் ரூ.1,22,000!
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
- ஐ.டி.பி.ஐ வங்கியின் idbibank.in என்ற தளத்தை பார்வையிடவும்.
- வேலை வாய்ப்பு அறிவிக்கை என்பதை கிளிக் செய்து, ஆன்லைனில் விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்யவும்.
- ஆன்லைன் விண்ணப்ப படிவம் தோன்றும்.
- மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரி கொடுத்து ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு உருவாக்கிக் கொள்ளவும்.
- ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்பவும்.
- புகைப்படம் மற்றும் கையெழுத்தை பதிவேற்றிவிட்டு விண்ணப்ப கட்டணம் செலுத்தவும்.
- விண்ணப்ப படிவத்தை சமர்பிக்கும் முன், ஏதேனும் விடுபட்டுள்ளதா? என்பதை கிராஸ் செக் செய்துக் கொள்ளவும்.
- விண்ணப்பத்தை சமர்பித்த பின், எதிர்கால தேவைக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.
தேர்வு செய்வது எப்படி?
முதலில் எழுத்துத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதன் பின்னர் தனிநபர் நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தகுதிவாய்ந்த நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும்.
இதையும் படிங்க : கல்லூரி பேராசிரியர் ஆக விருப்பமா? இந்த அறிவிப்பு உங்களுக்குதான்!