மாதம் ரூ.1 லட்சம் சம்பளம், எழுத்துத் தேர்வு இல்லை.. PNB வங்கியில் பணி!
PNB New Recruitment : நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு எழுத்துத் தேர்வு இல்லை. மாதச் சம்பளம் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் உளவியல் பணி: நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி (பி.என்.பி) உளவியலாளர்களை பணியமர்த்துவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணைய முகவரிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் வங்கி இணையதளத்தில் ஏற்கனவே உள்ளன. விண்ணப்பதாரர்கள் டிச.16ஆம் தேதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். எனினும் மேற்கொண்டு வேறு எந்தச் சலுகை மற்றும் கொடுப்பனவுகள் இருக்காது.
தேர்வு செய்வது எப்படி?
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான முழுமையான விவரங்கள் பி.என்.பி ஆட்சேர்ப்பு என்ற அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : டிகிரி தகுதி போதும்.. மாதம் ரூ.67,000 சம்பளம்.. உச்ச நீதிமன்றத்தில் பணி!
கல்வி மற்றும் வயது தகுதி
இதில், விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 69 ஆண்டுகள் ஆகும். இதில் கல்வித் தகுதியாக உளவியல் முதுகலை பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் உளவியலில் முதுகலை (எம்.ஏ) பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எம்.பில் அல்லது பிஹெச்.டிபட்டம் பெற்ற நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி அனுபவம்
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தப்பட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதச் சம்பளம்
மாதச் சம்பளமாக ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும் எனவும் கூடுதலாக சலுகைகள் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிபணியிடங்கள்
இந்தப் பணிக்கு எவ்வளவு காலியிடங்கள் உள்ளன உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
இதையும் படிங்க : மாதம் ரூ.7,000 சம்பளம், எல்.ஐ.சி.யில் பணி.. முழு விவரம்