டிகிரி தகுதி.. கர்நாடகா வங்கியில் அதிகாரி பணி.. உடனே முந்துங்க!

Karnataka Bank PO Recruitment 2024: கர்நாடகா வங்கியில் அதிகாரி பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இதற்டி டிகிரி கல்வித் தகுதி ஆகும். இந்தப் பணிகளுக்கு டிச.10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

டிகிரி தகுதி.. கர்நாடகா வங்கியில் அதிகாரி பணி.. உடனே முந்துங்க!

கர்நாடகா வங்கியில் வேலை வாய்ப்பு

Published: 

02 Dec 2024 17:00 PM

கர்நாடகா வங்கி அதிகாரி பணி: கர்நாடகா வங்கியில் காலியாகவுள்ள ஸ்கேல் 1 அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் karnatakabank.com என்ற முகவரியில் நவ.30ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.10 ஆகும். இதில் பல்வேறு படிநிலைகள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதன் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள வங்கி கிளைகளில் அவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். இந்தப் பணிக்கு தேர்வு கட்டணம், கல்வித் தகுதி, வயது, முக்கிய தேதிகள் மற்றும் ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டதாரிகளாக இருக்க வேண்டும் அல்லது இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பாக, வேளாண் அறிவியலில் பட்டதாரிகளாக இருக்க வேண்டும். மேலும், இந்திய அரசு, மத்திய பல்கலைக்கழக ஆணையம் உள்ளிட்டவற்றால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் 5 ஆண்டுகள் சட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும்.

மேலும், முடிவுகளுக்காகக் காத்திருப்பவர்கள் அல்லது முதுகலை பட்டப்படிப்பைத் தொடர்பவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் ஆவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஆர்.ஆர்.பி டெக்னீஷியன் கிரேடு 3 பணி.. விண்ணப்பத்தை சரிபார்ப்பது எப்படி?

விண்ணப்ப கட்டணம்

பொது, இடஒதுக்கீடு இல்லாதவர்கள், ஓ.பி.சி ஆகியோர் விண்ணப்ப கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரர்கள் ரூ.700 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு பொருந்தும் ஜி.எஸ்.டி-யும் உண்டு.

வயது தகுதி

இந்தப் பதவிக்கான அதிகபட்ச வயது நவம்பர் 1 ஆம் தேதியின்படி 28 ஆண்டுகள் ஆகும். அதாவது விண்ணப்பதாரர் நவம்பர் 2, 1996 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும்.
இதில், பட்டியல் மற்றும் பழங்குடி (எஸ்.சி, எஸ்.டி) விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்

ப்ரோபேஷனரி அதிகாரி பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.48,480 பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள்

  • அறிவிக்கை தேதி நவ.30
  • விண்ணப்ப பதிவு தொடக்கம் நவ.30
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.10
  • எழுத்துத் தேர்வு டிச. 22 (தோராயமாக)

தேர்வு எப்படி இருக்கும்?

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்களின் திறன், பகுத்தறிவு, கணினி விழிப்புணர்வு, ஆங்கில மொழித் திறன், பொது விழிப்புணர்வு ஆகியவை மதீப்பீட்டுக்கு உட்படுத்தப்படும்.
இதில் தேர்வானவர்கள் நேர்காணல் சுற்றுக்கு அழைக்கப்படுவார். இந்த நேர்காணல் மங்களூருவில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

  1. karnatakabank.com என்ற வங்கியின் அதிகாரப்பூர்வ இணைய முகவரிக்கு செல்லவும்.
  2. வேலை விண்ணப்ப படிவம் என்பதை கிளிக் செய்யவும்.
  3. விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அளித்து நிரப்பவும்.
  4. அசல் ஆவணங்களை ஸ்கேனிங் செய்து பதிவேற்றவும்.
  5. விண்ணப்பிக்கும் முன்பு, கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் சரியானதா? என ஆராய்ந்து கொள்ளவும்.
  6. சப்மிட் பட்டனை கிளிக் செய்து, எதிர்கால தேவைக்காக விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இதையும் படிங்க : தேர்வு கட்டணம் இல்லை.. என்ஜினீயரிங் கல்வித் தகுதி.. விமானப் படையில் வேலை!

நடிகை அனுபமா பரமேஷ்வரனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!
நடிகை ரஜிஷா விஜயன் பற்றிய சுவாரஸ்ய தகவல்..
குளிர் காலத்தில் பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல வேண்டுமா?
எந்த மாதிரி பார்ட்னர் கிடைத்தால் ஓகே சொல்லலாம்?