Bank Jobs: டிகிரி முடித்தவரா? வங்கியில் வேலை.. கை நிறைய சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

Bank Of Baroda Recruitment : பேங்க் ஆஃப் பரோடோ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பேங்க் ஆஃப் பரோடோ வங்கியில் பல்வேறு துறையில் சுமார் 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Bank Jobs: டிகிரி முடித்தவரா? வங்கியில் வேலை.. கை நிறைய சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

பேங்க ஆஃப் பரோடா

Updated On: 

05 Nov 2024 15:06 PM

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. வங்கி வேலைகளுக்காக பலரும் காத்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது, பேங்க் ஆஃப் பரோடோ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பேங்க் ஆஃப் பரோடோ வங்கியில் பல்வேறு துறையில் சுமார் 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இந்த பணியிடத்திற்கான சம்பளம், கல்வித்தகுதி போன்ற விவரங்களை பார்ப்போம்.

பணி விவரம்

பேங்க் ஆஃப் பரோடோ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பேங்க் ஆஃப் பரோடோ வங்கியில் பல்வேறு துறையில் 592 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.  அதன்படி,  நிதி பணிக்கு ஒரு இடங்களும், மார்க்கெட்டிங் பணிக்கு 140 இடங்களும், வணிகம் பணிக்கு 139 இடங்களும், Receivables Management பணிக்கு 202 இடங்களும், ஐடி பணிக்கு 31 இடங்களும், Corporate & Institutional Credit பணிக்கு 79 இடங்களும் என மொத்தம் 592 இடங்கள் நிரப்பப்டுகின்றன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது.

Also Read : ஜனவரியில் முதல்வர் மருந்தகம்.. விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

கல்வித்தகுதி

மேற்கண்ட பெரும்பாலான பணிகளுக்கு பெரும்பாலும் B.E, B.TECH, முடித்திருக்க வேண்டும். மேலும், CA, CMA, CFA, MBA அல்லது எதாவது ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேற்கண்ட பணிக்கு கட்டாயம் அனுபவம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வயது விவரம்

மேற்கண்ட பணிக்கு குறைந்தபட்சமாக 22 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். மேலும், பணிக்கு ஏற்ப வயது விவரம் மாறப்படும். மேலும், அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி, பழங்குடி, பட்டியலின பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

சம்பளம்

பேங்க் ஆஃப் பரோடோ வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அதற்கு ஏற்ற பணி போன்று சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்களில் இருந்து கல்வித்தகுதி, அனுபவம் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணல் மூலம் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.

Also Read : பெண்களுக்கு அரசு வேலை.. கல்வித்தகுதி இல்லை.. மாதம் ரூ.15,000 சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க!

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணிக்கு என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளத்திற்கு சென்று Apply Online என்பதை க்ளிக் செய்து அதில் இருக்கும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

முக்கிய நாட்கள்

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நவம்பர் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!