Bank Jobs: டிகிரி போதும்… வங்கியில் சூப்பர் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

Canara Bank Recruitment 2024: கனரா வங்கியின் காலிப் பணியிடங்கள் ஐபிபிஎஸ் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. இதோடு அவ்வப்போது அப்ரெண்டீஸ் பணியிடத்திற்கு நேரடியாகவும் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கனரா வங்கியில் 3,000 அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Bank Jobs: டிகிரி போதும்... வங்கியில் சூப்பர் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

கனரா வங்கி (picture credit: Getty)

Published: 

23 Sep 2024 13:43 PM

நாடு முழுவதும் பல்வேறு அரசு சார்ந்த வங்கிகள், தனியார் வங்கிகள் இயங்கி வருகிறது. இந்த வங்கிகளில் அவ்வப்போது காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும். வங்கியின் இந்த அறிவிப்புகளுக்கு இளைஞர்கள் முதல் பலரும் ஆண்டுதோறும் காத்திருப்பார்கள். அந்த வகையில் தற்போது கனரா வங்கி சார்பில் காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். மிகப்பெரிய வங்கியான கனரா வங்கியில் கைநிறைய சம்பளத்துடன் ஆயிரக்கணக்காணோர் வேலை பார்த்து வருகின்றனர். கனரா வங்கியின் காலிப் பணியிடங்கள் ஐபிபிஎஸ் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது.

இதோடு அவ்வப்போது அப்ரெண்டீஸ் பணியிடத்திற்கு நேரடியாகவும் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கனரா வங்கியில் 3,000 அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே, இந்த பணியிடத்திற்கு முழு விவரத்தை கீழ் கண்டவாறு பார்க்கலாம்.

Also Read: டிகிரி முடித்தவரா? மத்திய அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!

பணி விவரம்:

நாடு முழுவதும் கனரா வங்கியில் 3000 அப்ரண்டீஸ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் தமிழகத்தில் மட்டும் 350 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அண்டை மாநிலமாக கேரளாவில் 200 பணியிடங்களும், கர்நாடகாவில் 600 பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன. அதேபோல, புதுச்சேரியில் மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித்தகுதி:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும், உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது விவரம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது, 1996 செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 2024 செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
இதில் சில விண்ணப்பதாரர்களுக்கு தளர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி, பட்டியலின, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், விதவைகள், விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள், மறுமணம் செய்து கொள்ளாதவர்களுக்கு வகுப்புகள் வாரியாக 35 முதல் 40 வயது வரை தளர்வு அளிக்கப்படுகிறது.

ஊதிய விவரம்:

கனரா வங்கியில் அப்ரண்டீஸ் பணிக்கு தேர்வாகும் நபருக்கு மாத ஊதியாக ரூ.15,000 வழங்கப்படும் என்றும் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணிக்கு 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மெரிட் லிஸ்ட் மூலம் தேர்வு செய்யப்படுவீர்கள். மேலும், உள்ளூர் மொழி பற்றி ஆன்லைன் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கனரா வங்கியின் https://canarabank.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். அங்கு home page-ல உங்கள் பணிக்கான ஆப்ஷனை க்ளிக் செய்தவுடன் விண்ணப்படிவம் தோன்றும். அதில் உங்கள் விவரங்கள், சான்றிதழ்கள் போன்றவற்றை உள்ளீட்ட வேண்டும். பின்னர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

Also Read: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வேலை.. கைநிறைய சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

முக்கிய நாட்கள்:

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். இதில் பழங்குடியினர், பட்டியலின, மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 21ஆம் தேதி தொடங்கியது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க நாள் 14.10.2024 ஆகும். எனவே கனரா வங்கியில் அப்ரண்டீஸ் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

 

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!