5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Court Jobs: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வேலை.. கைநிறைய சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Chengalpattu Court Recruitment: செங்கல்பட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் 10 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Court Jobs: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வேலை.. கைநிறைய சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
வேலைவாய்ப்பு
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 22 Sep 2024 08:00 AM

தமிழ்நாட்டில் மொத்தம் 1,330 நீதிமன்றத்தில் உள்ளன. இதில் சென்னையில் மட்டும் 151 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 1,179 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நீதிமன்றங்களில் அவ்வப்போது காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும். குறிப்பாக மாவட்ட நீதிமன்றங்களில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு அடிக்கடி வரும். இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் 10 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம்:

செங்கல்பட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, டெபியூட்டி தலைமை சட்ட உதவி வழக்கறிஞர் (Deputy chief legal Aid defense counsel) பணிக்கு 2 இடங்களும், சட்ட உதவி வழக்கறிஞர் (Assistant Legal Aid defence counsel)  பணிக்கு 4 இடங்களும், அலுவலக உதவியாளர்/கிளார்க் (Office Assistant/Clerk) பணிக்கு 2 இடங்களும், அலுவலக பியூன் (Office Peon) பணிக்கு 2 இடங்களும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: டிகிரி முடித்தவரா? மத்திய அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!

கல்வித்தகுதி:

  • டெபியூட்டி தலைமை வழக்கறிஞர் மற்றும் சட்ட உதவி வழக்கிறஞர் ஆகிய பணிகளுக்கு சட்டம் படித்திருக்க வேண்டும். டெபியூட்டி தலைமை வழக்கறிஞர் பணிக்கு குற்றவியல் சட்டத்தில் 7 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 20 குற்றவியல் விசாரணைகளை கையாண்டு இருக்க வேண்டும்.
  • சட்ட ஆராய்ச்சியில் திறன் இருக்க வேண்டும். குற்றவழக்குகளை புரிந்து கொள்ளும் தன்மை இருக்க வேண்டும்.
  • உதவி சட்ட உதவி வழக்கறிஞர் பணிக்கு 1 முதல் 3 ஆண்டுகள் குற்றவியல் சட்டத்தில் அனுபவம் இருக்க வேண்டும். நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • அலுவலக உதவியாளர்/கிளார்க் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு டிகிரி பெற்றிருக்க வேண்டும்.
  • அலுவலக பியூன் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சம்பளம்:

டெபியூட்டி தலைமை வழக்கறிஞர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.40,000 வழங்கப்படும் என்றும் உதவி சட்ட உதவி வழக்கறிஞர்  பணிக்கு ரூ.25,000 மாத சம்பளமாகவும், அலுவலக உதவியாளர்/கிளார்க்  பணிக்கு 15,000 ரூபாயும், அலுவலக பியூன் பணிக்கு 12,000 ரூபாயும் மாத சம்பளமாக வழங்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயதுக்கு குறைவாக இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு கல்வித்தகுதி, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு பணிக்கு தேர்வு செய்வார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் https://chengalpattu.dcourts.gov.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்தும், கேட்கப்பட்ட நகலுடன் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

Also Read; 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. சென்னையில் சூப்பரான வேலை.. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!

அனுப்ப வேண்டிய முகவரி:

chariman/Principal District Judge,

District Legal service authority, ADR Building

Chengalpattu – 603001

மேற்கண்ட முகவரில் உங்கள் விண்ணப்ப படிவத்தை அனுப்ப வைக்க வேண்டும். இந்த பணிகிளுக்கு விண்ணப்பிக்க 30.09.2024 மாலை 5 மணி வரை கால அவகாசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Latest News