5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

10ஆம் வகுப்பு தகுதி போதும்.. சென்னை ஏர்போட்டில் வேலை!

Chennai Airport Recruitment: சென்னை விமான நிலையத்தில் காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

10ஆம் வகுப்பு தகுதி போதும்.. சென்னை ஏர்போட்டில் வேலை!
சென்னை விமான நிலையம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 01 May 2024 18:04 PM

இந்திய விமான போக்குவரத்து ஆணையத்தின் கீழ் இயங்கும் சென்னை விமான நிலையத்தில் காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு அவ்வப்போதும் வெளியாகும். அந்த வகையில், தற்போது விமான நிலையில் காலியாக உள்ள 422 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கான கல்வித்தகுதி, வயது விரம்பு, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவற்றை காணலாம்.

பணி விவரங்கள்:

Utitlity Agent Cum Ramp Driver – 130

Handyman/Handywomen – 292

மொத்த காலி பணியிடங்கள் – 422

கல்வித்தகுதி:

Utitlity Agent Cum Ramp Driver பணியிடத்திற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். அதுபோக கனரக வாகனங்களை இயக்குவதற்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

Handyman/Handywomen பணியிடத்திற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் வாசிக்கவும், புரிந்து கொள்ளும் திறனும் இருக்க வேண்டும். உள்ளூர் மொழி மற்றும் இந்தி மொழியை புரிந்து கொள்ளும் திறன் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு:

28 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி, வயது வரம்பில் தளர்வுகள் இருக்கிறது. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படுகிறது.

சம்பள விவரம்:

Utitlity Agent Cum Ramp Driver பணியிடத்திற்கு மாத சம்பளம் ரூ.24,960 வழங்கப்படுகிறது.  Handyman/Handywomen பணியிடத்திற்கு ரூ.22,530 வழங்கப்படுகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணியிடங்களுக்கு https://www.aiasl.in/Recruitment என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.  இந்த லிக்கில்  உள்ள படிவங்களை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Also Read : ரூ.1 லட்சம் வரை சம்பளம்! தமிழக அரசு வேலை..உடனே அப்ளை பண்ணுங்க!

முகவரி:

Office of the HRD Department,
AI Unity Complex,
Pallavaram Cantonment,
Chennai – 600043

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்:

Utitlity Agent Cum Ramp Driver – 02.05.24

Handyman/Handywomen – 04.05.24

இந்த பணியிடங்களுக்கான  விவரங்களை அறிய இந்த https://www.aiasl.in/Recruitment லிக்கை க்ளிக் செய்ய வேண்டும்.

மேலும், விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்வதற்கு இந்த https://www.aiasl.in/resources/Recruitment%20Advertisement%20for%20Chennai%20%20Station.pdf லிக்கை க்ளிக் செய்யலாம்.

Also Read : இன்ஜினியரிங் படித்தீர்களா? விமானத்துறையில் வேலை – உடனே அப்ளை பண்ணுங்க!