Chennai jobs: 89 காலிப் பணியிடங்கள்.. சென்னை மாநகராட்சியில் அட்டகாசமான வேலை.. மிஸ் பண்ணாதீங்க! - Tamil News | Chennai corporation recruitment 2024 89 vacancies inclues lab technician check the details and apply | TV9 Tamil

Chennai jobs: 89 காலிப் பணியிடங்கள்.. சென்னை மாநகராட்சியில் அட்டகாசமான வேலை.. மிஸ் பண்ணாதீங்க!

Published: 

25 Sep 2024 08:00 AM

Chennai Corporation Recruitment: சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறையில் மருத்துவ அலுவலர், மருந்தாளுநர், லேப் டெக்னீசியன் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்க்கலாம்.

Chennai jobs: 89 காலிப் பணியிடங்கள்.. சென்னை மாநகராட்சியில் அட்டகாசமான வேலை.. மிஸ் பண்ணாதீங்க!

சென்னை மாநகராட்சி

Follow Us On

பெருநகர சென்னை மாநகராட்சியில் அவ்வப்போது காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும். அந்த வகையில் தற்போது சென்னை மாநகராட்சியில் பல்வேறு துறையில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதாவது, சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறையில் மருத்துவ அலுவலர், மருந்தாளுநர், லேப் டெக்னீசியன் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை கீழ்கண்டவாறு பார்க்கலாம்.

பணி விவரம்:

சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறையில் மருத்துவ அலுவலர், மருந்தாளுநர், லேப் டெக்னீசியன் என 89 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மருத்துவ அதிகாரி DTC (Medical Officer),  District program cordinator, district hiv cordinator, district PPM coordinator, புள்ளியியல் உதவியாளர் (Statiscal Assistant), data entry பணிகளுக்கு தலா ஒரு இடங்களும், மருத்துவ அதிகாரி Medical college DTC (Medical Officer), Pharmacist பணிகளுக்கு தலா 3 இடங்களும், senior tuberculosis supervisor பணிக்கு 2 இடங்களும், senior treatment supervisor பணிக்கு 4 இடங்களும், lab technician பணிக்கு 56 இடங்களும், TB health visitor 11 இடங்களும், counselor 4 இடங்களும் என மொத்தம் 89 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

Also Read: 10ஆம் வகுப்பு தேர்ச்சியா? மாதம் ரூ.69,000 சம்பளம்.. ஈஸியா அப்ளை பண்ணலாம்.. செக் பண்ணுங்க!

கல்வித்தகுதி:

Medical officer பணிக்கு எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும். District Program coordinator, district Hiv coordinator. District PPM Cordinator பணிக்கு அறிவியல் துறையில் இளங்கலை பட்டமும், சமூகப் பணி, சமூகவியல், உளவியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஒரு ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.

கணினியின் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும. இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமைம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Statiscal Assistant பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் புவிவியல் துறை சார்ந்த படிப்பை முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தட்டச்சு செய்யும் திறன் இருக்க வேண்டும். அதோடு எம்எஸ் வோர், எக்ஸல் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். Senior treatment supervisor பணிக்கு அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

lab technician பணிக்கு 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆய்வக தொழில்நுட்பத்தில் 2 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். pharmacist பணிக்கு பார்மசியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மருத்துவமனை, சுகாதார மையங்களில் மருந்தாளராக ஒரு ஆண்டு பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கான விவரங்கள் சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையத்தில்  தெரிந்து கொள்ளவும்.

வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு வயது வரம்பு குறித்த தகவல்கள் எதுவும் அறிவிப்பில் குறிப்பிடவில்லை. இருப்பினும், இந்த பணிகள் தற்காலிக அடிப்படியில் நிரப்பப்படுகின்றன. ஓராண்டு மட்டுமே பணியாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

மருத்துவ அதிகாரி DTC (Medical Officer),  Medical college DTC (Medical Officer) பணிகளுக்கு மாத சம்பளமாக ரூ.60,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், District program cordinator, district hiv cordinator, district PPM coordinator பணிகளுக்கு 26,500 ரூபாயும், புள்ளியியல் உதவியாளர் (Statiscal Assistant) பணிக்கு 26,000 ரூபாயும், data entry பணிக்கு 13,500 ரூபாயும், மருத்துவ அதிகாரி Pharmacist பணிக்கு 15,000 ரூபாயும், senior tuberculosis supervisor, senior treatment supervisor பணிக்கு 19,800 ரூபாயும், lab technician பணிக்கு 13,000 ரூபாயும், TB health visitor, counselor பணிக்கு 13,000 ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

https://chennaicorporation.gov.in/gcc/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

Also Read: டிகிரி போதும்… வங்கியில் சூப்பர் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

அனுப்ப வேண்டிய முகவரி:

The Member Secretary,
District Health Society – NTEP Chennai,
Public Health Department,
Ripon Building,
Chennai – 600003

மேற்கண்ட முகவரிக்கு உங்கள் விண்ணப்ப படிவத்தை வரும் 27ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் சீக்கிரமாக விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தப்பது.

ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
Exit mobile version