Chennai High Court Jobs: டிகிரி முடித்தவர்களா? மாதம் ரூ.2 லட்சம் சம்பளம்.. விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதாவது, சென்னை உயர்நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் (Interpreter) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாளாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணியிடத்திற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
நீதிமன்றத்தில் வேலை: சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதாவது, சென்னை உயர்நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் (Interpreter) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாளாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணியிடத்திற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
பணி விவரங்கள்:
சென்னை உயர்நீதிமன்றத்தில் (Interpreter) பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உள்ள விவரங்களை மொழியாக்கம் செய்து தர வேண்டும்.
Also Read: மிஸ் பண்ணிடாதீங்க.. குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
கல்வித்தகுதி:
மேற்கண்ட பணியிடத்திற்கு 10,12ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நன்றாக எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். மொழிபெயர்க்கவும் தெரிந்திருக்க வேண்டும். இந்த மொழிகளில் இருந்து ஆங்கிலத்தில் மொழியெர்க்க தெரிந்திருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
மேற்கண்ட பணியிடத்திற்கு மாத சம்பளமா ரூ.56,100 முதல் ரூ.2,05,700 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வயது விவரம்:
இந்த பணியிடத்திற்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளவு அளிக்கப்படுகிறது. அதன்படி,
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளம் மூலம் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்:
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினருக்கு ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, கணவனை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
மேற்கண்ட விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜூலை 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: தேர்வே இல்லாமல் ரயில்வேயில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்.. மிஸ் பண்ணாதீங்க!