5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சென்னையில் மத்திய அரசு வேலை! 10ஆம் வகுப்பு படித்தாலே போதும்..உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னையில் மத்திய அரசு வேலை! 10ஆம் வகுப்பு படித்தாலே போதும்..உடனே அப்ளை பண்ணுங்க!
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 29 Apr 2024 11:00 AM

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படைடியில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும், திறமையும் உள்ளவர்கள் விண்னப்பிக்கலாம்.

பணி விவரம்:

ஓட்டுநருடன் கூடிய மெக்கானிக் – 15 காலி பணியிடங்கள்

கல்வித்தகுதி:

10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

மேற்கண்ட ஓட்டுநருடன் கூடிய மெக்கானிக் பணிக்கு வயது வரம்பானது 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

மேற்கண் பணிக்கு மாத சம்பளமாக ரூ.16,000 வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு https://nie.gov.in/oppurtunities/careers என்ற லிக்கை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்பத்தை பிரிண்டு எடுத்து கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 09.05.24

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

ICMR-National Intitute of research in tuberculosis,
NO.1, Mayor sathyamoorthy road, chetpet,
Chennai – 600031

மேற்கண்ட பணியிடங்களுக்கான மேலும் விவரங்களுக்கு https://nie.gov.in/oppurtunities/careers என்ற லிக்கை கிளிக் செய்ய வேண்டும்.