5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Job Alert : ரூ.30000 சம்பளம்.. சென்னை ஐஐடியில் வேலை.. முழு விவரம்!

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்தியா தொழில்நுட்ப கழகத்தில் உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பல்கலைக்கழகம் தொழில்நுட்பக் கல்வி, அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி தொழில் முனைவு மற்றும் தொழில் துறை ஆலோசனை ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது.  இந்த நிலையில், சென்னை தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள JRF பணியிடத்திற்காக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Job Alert : ரூ.30000 சம்பளம்.. சென்னை ஐஐடியில் வேலை.. முழு விவரம்!
சென்னை ஐஐடி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 29 Jun 2024 18:01 PM

சென்னை ஐஐடியில் வேலை: சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்தியா தொழில்நுட்ப கழகத்தில் உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பல்கலைக்கழகம் தொழில்நுட்பக் கல்வி, அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி தொழில் முனைவு மற்றும் தொழில் துறை ஆலோசனை ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது.  இந்த நிலையில், சென்னை தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள JRF பணியிடத்திற்காக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, Junior Research Fellow பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கல்வித்தகுதி:

மேற்கண்ட பணியிடத்திற்கு பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ECE படித்திருக்க வேண்டும். GATE/NET/UGC தேர்வு மதிப்பெண் எடுத்துக் கொள்ளப்படும். சிக்னல் ப்ராசசிங், மெசின் லர்னிங் அல்காரிதம் (Machine Learning Algorithm) ஆகியவற்றில் பணி செய்த அனுபவம் இருக்க வேண்டும்.

Also Read: யுஜிசி நெட் மறுதேர்வு தேதி அறிவிப்பு.. புதிய அட்டவணை வெளியிட்ட என்டிஏ!

வயது:

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 21 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

மேற்கண்ட பணியிடத்திற்கு ரூ.37,000 மாத சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பணியிடத்திற்கு icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். முதல் முறை விண்ணப்பிப்போர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தபின் உங்களது ஐடியை ரெஜிஸ்டர் செய்யவும். பின்னர், லாகின் செய்து விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஜூலை 8ஆம் தேதிக்குள் விண்ணணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தொடர்புக்கு 044 2257 9796 என்ற எண்ணுக்கு காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை கால் செய்து சந்தேகத்தை தீர்த்து கொள்ளலாம்.

Also Read: டிகிரி முடிச்சாச்சா? 17,000 காலி பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்க!