Chennai Jobs: டிகிரி முடித்தவரா? ரூ.1.60 லட்சம் சம்பளம்.. சென்னை மெட்ரோவில் சூப்பரான வேலை.. உடனே பாருங்க!

Chennai Metro Rail Limited Recruitment: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக  உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்பபோம்.

Chennai Jobs: டிகிரி முடித்தவரா? ரூ.1.60 லட்சம் சம்பளம்.. சென்னை மெட்ரோவில் சூப்பரான வேலை.. உடனே பாருங்க!

சென்னை மெட்ரோ ரயில்

Updated On: 

05 Oct 2024 11:55 AM

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு அந்த அளவுக்கு பயனுள்ளதாக உள்ளது. மற்றொரு பக்கம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் அவ்வப்போது வேலை வாய்ப்புகள் குறித்த அறிவுப்பு வரும். இந்த நிலையில், தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக  உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்பபோம்.

பணி விவரம்:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் மொத்தம் 3 இடங்கள் காலியாக உள்ளதாகவும் அதனை நிரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. AGM (Elevated Construction) பணிக்கு ஒரு இடங்களும், AGM (Underground Construction) பணிக்கு 2 இடங்களும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E/B.TECH, M.E/M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்த 17 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். பாலம் கட்டுதல், நெடுஞ்சாலை அமைத்தல், ரயில் உள்கட்டமைப்பு, மெட்ரோ திட்டம் உள்ளிட்டவற்றில் குறைந்த 17 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Also Read: ரூ.60 ஆயிரம் ஊக்கத்தொகை.. PM இன்டர்ன்ஷிப் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி?

வயது விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு அதிகபட்சமா 47 வயது வரை இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், வயது வரம்பில் தளர்வு உள்ளது. அதன்படி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவ படை வீரர்களுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

சம்பளம்:

மேற்கண்ட பணிகளுக்கு மாத சம்பளமாக ரூ.1,60,000 வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதரனை ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணிக்கு https://chennaimetrorail.org/job-notifications/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் இந்த இணையதளத்தில் செல்லவும். அங்கு Career என்ற ஆப்ஷனை தேர்வு செய்து apply என்பதை க்ளிக் செய்யவும். அதில் உங்கள் இமெயில் ஐடி, மொபைல் நம்பரை உள்ளீட்டு லாக்கின் செய்து கொள்ள வேண்டும். பின்பு தோன்றும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

Also Read: அறநிலையத்துறையில் வேலை.. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.. மிஸ் பண்ணிடாதீங்க!

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.50 செலுத்த வேண்டும்.

முக்கிய தேதி:

மேற்கண்ட பணிக்கு வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?