5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

CISF Recruitment 2024: 12ஆம் வகுப்பு தேர்ச்சியா? மத்திய அரசு வேலை.. விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதன்படி, மத்திய தொழில் பாதுகாப்பு படையில் உள்ள தேசிய தீயணைப்பு பிரிவில் கான்ஸ்டபிள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CISF Recruitment 2024: 12ஆம் வகுப்பு தேர்ச்சியா? மத்திய அரசு வேலை.. விண்ணப்பிப்பது எப்படி?
சிஐஎஸ்எஃப் வீரர்கள் (Photo Credit: Getty)
umabarkavi-k
Umabarkavi K | Published: 19 Sep 2024 19:26 PM

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பு அவ்வப்போதும் வெளியாகும். மத்திய அரசின் வேலைக்காக பலரும் காத்திருக்கின்றனர். இதனால் மத்திய அரசின் எந்த துறையிலும் வேலை பார்க்க அனைவரும் முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக ரயில்வே, பாதுகாப்பு துறையில் வெளியாகும் வேலை வாய்ப்பை அறிவிப்புக்காக ஆண்டுதோறும் காத்திருக்கின்றனர். இப்படியான சூழலில், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதன்படி, மத்திய தொழில் பாதுகாப்பு படையில் உள்ள தேசிய தீயணைப்பு பிரிவில் கான்ஸ்டபிள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம்:

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் உள்ள தேசிய தீயணைப்பு பிரிவில் கான்ஸ்டபிள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கான்ஸ்டபிள்/தீயணைப்பு பணிக்கு 1,130 காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் உள்ள தேசிய தீயணைப்பு பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக அறிவியல் பாடம் கொண்ட பிரிவை தேர்ந்தெடுக்கப்பட்டு 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: அறநிலையத்துறையில் வேலை.. 8ஆம் தேதி தேர்ச்சி போதும்.. உடனே செக் பண்ணுங்க!

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். 01/10/2001க்கு முன்னதாகவும், 30/09/2006க்கு பிற்பகுதியிலும் பிறந்திருக்கக் கூடாது.

சம்பளம்:

மேற்கண்ட பணிக்கு நிலை-3யின் படி மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு முதலில் உடற்தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இதில் தேர்வாகும் நபர்களுக்கு எழுத்தத் தேர்வு நடத்தப்பட்டு, அதன் மூலம் பணிக்கு தேர்வு செய்வார்கள்.

உடற்தகுதி தேர்வு:

மேற்கண்ட பணிக்கு நடத்தப்படும் உடற்தகுதி தேர்வுக்கு ஆண்கள் குறைந்தபட்சம் 170 செ.மீ உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரணமாக 80 செ.மீ முதல் 85 செ.மீ வரை இருக்க வேண்டும். மேலும் 5 கி.மீ தூரத்தை 24 நிமிடத்தில் கடக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். CISF இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cisfrectt.cisf.gov.in செல்ல வேண்டும். முகப்புப் பக்கத்தில் கிடைக்கும் உள்நுழைவு இணைப்பைக் கிளிக் செய்யவும். CISF கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2024 இல் விண்ணப்பதாரர்கள் கிளிக் செய்ய வேண்டிய புதிய பக்கம் தோன்றும். அதன்பின், நீங்கள் பதிவு செய்த கணக்கு விவரங்களை உள்ளீட வேண்டும். பின்னர், உங்களுக்கு விண்ணப்ப படிவம் தோன்றும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து கட்டணத்தை செலுத்திவிட வேண்டும். பின்னர், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

விண்ணப்ப கட்டணம்:

பொது பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பட்டியலினம், பழங்குடியினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் நெட் பேங்கிங் மூலமாகவும், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மற்றும் யுபிஐ மூலமாகவும் அல்லது எஸ்பிஐ சலானை உருவாக்குவதன் மூலம் எஸ்பிஐ கிளைகளில் பணம் மூலமாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு என்ற இணையதளம் சென்று பார்க்கலாம்.

Also Read: அரசு மருத்துவமனையில் எக்கச்சக்க வேலை.. 8ஆம் வகுப்பு படித்தாலே போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க!

முக்கிய தேதிகள்:

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 30.09.2024-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய 10.10.2024 முதல் 12.10.2024-க்குள் செய்துவிட வேண்டும். தேர்வு தேதி குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News