தேர்வு கட்டணம் இல்லை.. என்ஜினீயரிங் கல்வித் தகுதி.. விமானப் படையில் வேலை!

AAI Apprentice Recruitment 2024: இந்திய விமானப் படையில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டு டிப்ளமோ அல்லது என்ஜினீயரிங் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு கட்டணம் இல்லை.. என்ஜினீயரிங் கல்வித் தகுதி.. விமானப் படையில் வேலை!

இந்திய விமானப் படையில் வேலை வாய்ப்பு

Published: 

01 Dec 2024 12:16 PM

இந்திய விமானப் படையில் அப்ரெண்டிஸ் பணி: இந்திய விமானப் படையில் அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இதில், அப்ரண்டிஸ் விண்ணப்பப் படிவம் 2024ஐ நிரப்புவதற்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. இதற்கான அறிவிப்பை, இந்திய விமானப் படை நவ.28ஆம் தேதி வெளியிட்டது. அந்த அறிவிப்பில், பல்வேறு பட்டதாரி, டிப்ளமோ மற்றும் ஐடிஐ டிரேட் அப்ரண்டிஸ் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 197 பணியிடங்களை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் nats.education.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். பணி தொடர்பான, அனைத்து ஆன்லைன் விண்ணப்பங்களையும் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 25 ஆகும்.

இந்தப் பணிக்களுக்கான ஆவண சரிபார்ப்பு, நேர்காணல் மற்றும் மருத்துவ சோதனை உள்ளிட்ட தேர்வுகள் அதன்பின்னர் நடைபெறும். இந்தத் தேர்வுகளில் விண்ணப்பதாரர்களின் செயல்திறன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் வெவ்வேறு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ஆட்சேர்ப்பு திட்டத்தின் தகுதி அளவுகோல்கள், உதவித்தொகை மற்றும் விண்ணப்ப செயல்முறை பற்றிய முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையத்தில் முழுவதுமாக தெரிந்துக் கொள்ளவும்.

இதையும் படிங்க : JNU பல்கலையில் பிஹெச்.டி படிக்க ஆசையா? உடனே விண்ணப்பிங்க!

வயது தகுதி

விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 26 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித் தகுதி

4 ஆண்டு என்ஜினீயரிங் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலால் (AICTE), அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் ஐ.டி.ஐ அல்லது என்.சி.வி.டி (ITI அல்லது NCVT) சான்றிதழ்களையும் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

இந்திய விமானப் படை அப்ரண்டிஸ் பணிக்கு பட்டதாரிக்கு ரூ.15 ஆயிரமும், ஐ.டி.ஐ கல்வித் தகுதிக்கு ரூ.9 ஆயிரமும், டிப்ளமோ கல்வித் தகுதிக்கு ரூ.12 ஆயிரமும் வழங்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

  1. விண்ணப்பதாரர்கள் என்.ஏ.டி.யின் அதிகாரப்பூர்வ இணையதள போர்ட்டலான nats.education.gov.in என்பதில் உள்நுழையவும்.
  2. ஹோம் பேஜில், “மாணவர்” (Student) என்ற தாவலை கிளிக் செய்யவும்.
  3. அடுத்து, மாணவர் பதிவு (Student Register) என்பதற்கு செல்லவும்.
  4. ஆன்லைனில் தோன்றும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை பதிவேற்றவும்.
  5. விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்த பின்னர், சப்மிட் செய்யவும்.
  6. மின்னஞ்சல் அல்லது போன் நம்பர் அளித்து ஒடிபி செயல்முறையை முடிக்கவும்.
  7. தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் பதிவு செயல்முறையை முடிக்கவும்.
  8. விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப படிவத்தை பி.டி.எஃப் ஃபார்மட்டில் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

இதையும் படிங்க : பி.எஸ்.எஃப் ஆட்சேர்ப்பு 2024.. வெளியான அதிரடி மாற்றங்கள்!

இணையத்தில் வைரலாகும் சித்தார்த் – அதிதி ராவ் தம்பதியின் போட்டோஸ்
நீல நிற புடவையில் நடிகை அனிகா... வைரலாகும் போட்டோஸ்
நடிகை அனுபமா பரமேஷ்வரனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!
நடிகை ரஜிஷா விஜயன் பற்றிய சுவாரஸ்ய தகவல்..