5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வங்கியில் மேனேஜர் பணி.. 253 காலியிடங்கள்.. உடனே முந்துங்க!

Central Bank of India Jobs: சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியா மேலாளர் பணிக்கு ஆன்லைன் தேர்வு டிசம்பர் 14 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நேர்காணல்கள் தற்காலிகமாக ஜனவரி 2025 இல் நடத்தப்படும்.

வங்கியில் மேனேஜர் பணி.. 253 காலியிடங்கள்.. உடனே முந்துங்க!
சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் மேனேஜர் பணிக்கு அழைப்பு
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 22 Nov 2024 12:37 PM

1911 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி சர் சொரப்ஜி போச்கனாவாலாவால், சர் பெரோஸ்ஷா மேத்தா தலைவராக இந்திய சென்ட்ரல் பேங்க் நிறுவப்பட்டது. இது, இந்தியர்களுக்கு முற்றிலும் சொந்தமான, இந்தியர்களால் நிர்வகிக்கப்படும் முதல் வணிக இந்திய வங்கியாக அறியப்படுகிறது. அதன்படி, வங்கியின் முதல் கிளை ஹைதராபாத்திலும், அடுத்த கிளை 1925ல் செகந்திராபாத்திலும் தொடங்கப்பட்டது. இதற்கிடையில், 1923 ஆம் ஆண்டில், அலையன்ஸ் பேங்க் ஆஃப் சிம்லாவின் தோல்வியை அடுத்து டாடா இண்டஸ்ட்ரியல் வங்கியை அது வாங்கியது. இதன் மெட்ராஸ் கிளை 1920ல் திறக்கப்பட்டது. இந்த வங்கியில் தற்போது மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு, நேர்காணல் தேதி

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான அனைத்து விண்ணப்பதாரர்களும் அதிகாரப்பூர்வ இணையதளமான centralbankofindia.co.in மூலம் ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த, காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 3 ஆகும்.
மேலும், ஆன்லைன் தேர்வு டிசம்பர் 14 அன்று நடைபெறும் என்றும் நேர்காணல்கள் தற்காலிகமாக ஜனவரி 2025 இல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி.. எழுத்து தேர்வு இல்லை.. மாதச் சம்பளம் ரூ.1,22,000!

காலியிடங்கள்

சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் மொத்தம் 253 காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.

விண்ணப்பக் கட்டணம்

பட்டியல், பழங்குடி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.175-ஐ ஜி.எஸ்.டி-யுடன் சேர்த்து கட்ட வேண்டும்.
மற்ற வகை விண்ணப்பதாரர்கள் ரூ.850 மற்றும் ஜி.எஸ்.டி சேர்த்து விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

ஆன்லைன் பிளாட்ஃபார்ம் தேர்வு/ சூழ்நிலை அடிப்படையிலான தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் சுற்று மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

  1. centralbankofindia.co.in இணையதளத்தை பார்வையிடவும்.
  2. சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலை வாய்ப்பு என்பதை கிளிக் செய்யவும்.
  3. விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக அளித்து நிரப்பவும்.
  4. விண்ணப்ப கட்டணம் செலுத்தவும்.
  5. எதிர்கால தேவைக்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இதையும் படிங்க : கிழக்கு ரயில்வே ஆட்சேர்ப்பு.. 60 பணியிடங்கள்.. உடனே முந்துங்க!

Latest News