பேங்க் ஆஃப் பரோடாவில் பணி.. 592 காலியிடங்கள்.. உடனே முந்துங்க!
Bank of Baroda Recruitment : பேங்க் ஆப் பரோடாவில் காலியாகவுள்ள 592 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் அக்.30, 2024ஆம் தேதியை தொடங்கிவிட்டன.
பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஒப்பந்த அடிப்படையில் நிதி, எம்.எஸ்.எம்.இ வங்கி, டிஜிட்டல் குழு, வரவு மேலாண்மை, தகவல் போன்ற பல்வேறு துறைகளில் 592 காலியிடங்களுக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் அக்டோபர் 30, 2024 முதல் தொடங்கி விட்டது. நவ.19 கடைசி தேதியாகும். சரியாக நவ.19, 2024 இரவு 11.59 மணிக்கு இந்த விண்ணப்பங்கள் மூடப்பட்டுவிடும். காலியாகவுள்ள துறை வாரியான காலியிடங்கள் வங்கியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
காலி பணி இடங்கள் விவரம்
பேங்க் ஆஃப் பரோடா ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு துறைகளுக்கு தனிநபர்களை பணியமர்த்துகிறது. மொத்தம் 592 காலியிடங்கள் உள்ளன. இவற்றில், 202 பணியிடங்கள் மேலாண்மை மற்றும் 139 டிஜிட்டல் குழுவிற்கு உள்ளன. இது தொடர்பாக துறை வாரியான காலியிடங்கள் வங்கியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி
- நிதி – 01
- எம்.எஸ்.எம்.இ வங்கி – 140
- டிஜிட்டல் பிரிவு – 139
- மேலாண்மை – 202
- தகவல் தொடர்பு 31
- கார்பரேட் கிரெடிட் – 79
விண்ணப்ப கட்டணம்
பொது, இ.டபிள்யூ.எஸ், ஒ.பி.சி பிரிவினருக்கு ரூ.600ம், எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு ரூ.100-ம் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி
பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முன், பாங்க் ஆஃப் பரோடாவால் குறிப்பிடப்பட்ட தகுதி வரம்புகளை விண்ணப்பதாரர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: டெல்லி ஐ.ஐ.டி.யில் ஆங்கில ஆசிரியர் பணிக்கு அழைப்பு: விண்ணப்பிக்கும் வழிமுறை இதோ!
சம்பளம்
பேங்க் ஆஃப் பரோடா பல்வேறு பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு கவர்ச்சிகரமான சம்பளத்தை வழங்குகிறது. தகுதிகள், அனுபவம், பணிக்கான ஒட்டுமொத்த பொருத்தம், கடைசியாக வாங்கப்பட்ட சம்பளம் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படும்.
தேர்வு முறை
ஆட்சேர்ப்பு 2024க்கான தேர்வு செயல்முறை இரண்டு முக்கிய படிகளை உள்ளடக்கியது. முதலில், விண்ணப்பதாரர்கள் அவர்களின் தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் பட்டியலிடப்படுவார்கள். அதாவது, தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்பவர்கள் மட்டுமே செயல்பாட்டில் முன்னேறுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
- பேங்க் ஆஃப் பரோடாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான bankofbaroda.in-க்கு செல்லவும்.
- கேரியர் (Career tab) என்பதை கிளிக் செய்யவும்.
- விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்யவும்.
- அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.
- எதிர்கால தேவைக்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.
இதையும் படிங்க: ஐ.டி.ஐ, டிப்ளமோ கல்வித் தகுதி.. இந்திய விமானப் படையில் அப்ரெண்டிஸ் பணிக்கு அழைப்பு!