PM Internship scheme: ரூ.60 ஆயிரம் ஊக்கத்தொகை.. PM இன்டர்ன்ஷிப் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி?
கடந்த ஜூலை 23 ஆம் தேதி 2024-2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் PM இன்டர்ன்ஷிப் திட்டம் பற்றி அறிவிப்பு வெளியானது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாக கொண்டு இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 2024-25 நிதியாண்டில் இத்திட்டத்திற்காக ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம்: இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று மே மாதம் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் மத்தியில் 3வது முறையாக பாஜக ஆட்சி அமைத்தது. நிர்மலா சீதாராமன் மீண்டும் மத்திய நிதியமைச்சர் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 23 ஆம் தேதி 2024-2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் PM இன்டர்ன்ஷிப் திட்டம் பற்றி அறிவிப்பு வெளியானது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாக கொண்டு இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 2024-25 நிதியாண்டில் இத்திட்டத்திற்காக ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 1.25 லட்சம் இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு டிசம்பர் 2 ஆம் தேதி முதல் பயிற்சி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன?
இந்த ஒரு வருட இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு முழுநேர வேலையில் ஈடுபடாத 21 முதல் 24 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 அல்லது அதற்கு மேற்பட்ட வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேசமயம் IIT, IIM அல்லது IISER போன்ற முதன்மை கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் CA அல்லது CMA தகுதி பெற்றவர்கள் இந்த இன்டர்ன்ஷிப்பிற்கு விண்ணப்பிக்க தகுதி பெற மாட்டார்கள். முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பிக்க முடியாது
அரசு சம்பந்தப்பட்ட வேலை செய்யும் பணியாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த நபர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது.
2023-24 நிதியாண்டில் ₹8 லட்சம் அல்லது அதற்கு மேல் வருமானம் ஈட்டிய குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதி பெற மாட்டார்கள்.
Also Read: TNHRCE Recruitment 2024 : அறநிலையத்துறையில் வேலை.. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.. மிஸ் பண்ணிடாதீங்க!
திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி?
pminternship.mca.gov.in என்ற இணையதளம் வாயிலாக தகுதியுடையவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான போர்ட்டல் அக்டோபர் 12 ஆம் தேதி முதல் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயதசமி அன்று திறக்கப்படும் இந்த தளத்தில் தேவையான ஆவணங்கள் கொண்டு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசிடமிருந்து மாதாந்திர உதவித்தொகையாக ரூ4,500 வழங்கப்படும், மேலும் பயிற்சி பெறும் நிறுவனத்தின் CSR நிதியில் இருந்து ரூ.500 வழங்கப்படும்.
மேலும், மத்திய அரசு ஒருமுறை மானியமாக ரூ.6,000 பயிற்சி இடத்தில் சேர்ந்தவுடன் வழங்கும் என தெரிவித்துள்ளது. அதேசமயம் மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டங்களான பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதமர் சுரக்ஷா பீமா யோஜனா ஆகியவற்றின் கீழ் பயிற்சி பெறும் ஒவ்வொருவருக்கும் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இதற்கான பிரீமியம் தொகையை அரசே செலுத்தும்.
ஆன்லைன் வாயிலாகவும், தொலைதூரக் கல்வித் திட்டங்களிலும் பயின்றவர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் பிஏ, பிஎஸ்சி, பி.காம், பி.சி.ஏ, பி.பி.ஏ, பி.பார்மா போன்ற இளநிலைப் பட்டங்களைப் பெற்றவர்கள் இத்திட்டத்தில் சேரத் தகுதியானவர்கள். ஒருவர் அதிகப்பட்சமாக ஐந்து பிரிவுகளில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க மறக்காதீர்கள்
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை தவிர்க்க மத்திய மாநில அரசுகள் வெவ்வேறு வகையான வகையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் வளரும் இளம் தலைமுறையினருக்கு பயிற்சி அளிப்பதால் அவர்கள் எதிர்காலத்தில் மிகச் சிறப்பான பணியிடத்தில் அமர்வதற்கான வாய்ப்பாக இது அமையும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே இது போன்ற வாய்ப்புகளை தகுதியுடையவர்கள் ஒருபோதும் தவற விடாதீர்கள். ஒருவேளை நீங்கள் தகுதியுடையவர் இல்லை என்றாலும் உங்களை சுற்றி இருக்கும் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் பயன் பெறும் வகையில் இத்திட்டத்தைப் பற்றி சொல்லி சொல்லுங்கள்