5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஆர்.ஆர்.பி டெக்னீஷியன் கிரேடு 3 பணி.. விண்ணப்பத்தை சரிபார்ப்பது எப்படி?

RRB Technician grade 3 2024: ஆர்.ஆர்.பி டெக்னீஷியன் விண்ணப்பங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன. ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று இதனை விண்ணப்பிக்கலாம்.

ஆர்.ஆர்.பி டெக்னீஷியன் கிரேடு 3 பணி.. விண்ணப்பத்தை சரிபார்ப்பது எப்படி?
ஆர்.ஆர்.பி டெக்னீஷியன் விண்ணப்பங்கள் சரிபார்ப்பு
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 27 Nov 2024 12:03 PM

ஆர்.ஆர்.பி விண்ணப்பங்கள் 2024: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் கிரேடு 3 டெக்னீஷியன் ஆட்சேர்ப்புத் தேர்வுக்கான விண்ணப்ப படிவ நிலையை பகிர்ந்துள்ளன. இதை சரிபார்த்துக் கொள்ள விண்ணப்பதாரர்கள் rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய முகவரிக்கு சென்று கேட்கப்படும் விவரங்களை உள்ளீட்டு தங்களின் விண்ணப்ப நிலையை அறிந்துக் கொள்ளலாம். மேலும், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் தகவல்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. நிராகரிக்கப்பட்ட விண்ணப்ப பட்டியலில் அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளது.

குறுஞ்செய்தி, மின்னஞ்சல்

தொடர்ந்து, விண்ணப்பத்தின் நிலை குறித்து விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்படும் என்றும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து ரயில்வே வாரிய அதிகாரிகள் ஒருவர் கூறுகையில், “தற்காலிகமாகத் தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியலைத் தயாரிப்பதில் முழு அக்கறை எடுத்துக்கொண்டோம்.
கவனக்குறைவான பிழைகள் அல்லது அச்சுப் பிழைகளை சரிசெய்ய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்துக்கு உரிமை உள்ளது.
ஆர்.ஆர்.பி-யால் நிராகரிக்கப்பட்ட விண்ணப்ப தாரர்களிடம் இருந்து எந்த கடிதப் பரிமாற்றத்தையும் நடத்த இயலவில்லை. இதற்கு வருந்துகிறோம்” என்றார்.

இதையும் படிங்க : ரயில்வே லோகோ பைலட் ஹால் டிக்கெட் வந்தாச்சு.. இப்படி டவுன்லோடு பண்ணுங்க!

ஆர்.ஆர்.பி கிரேடு 3 விண்ணப்பத்தை சரிபார்ப்பது எப்படி?

  • இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய முகவரிக்கு செல்லவும்.
  • விண்ணப்பதாரர்கள் என்ற டேப்-ஐ திறக்கவும்.
  • விண்ணப்பதாரர்கள் அதில் கேட்கப்படும் விவரங்களை அளிக்கவும்.
  • விண்ணப்பதாரர்கள் தங்களின் விவரங்களை அளித்த பின்னர் லாகின் செய்யவும்.
  • விண்ணப்பதாரரின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? என்பன உள்ளிட்ட விவரங்கள் டிஸ்பிளேயில் தோன்றும்.

காலியிடங்கள் எத்தனை?

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு இயக்கம் தற்போது, 14 ஆயிரத்து 298 கிரேடு 1 மற்றும் கிரேடு 3 டெக்னீசியன் காலியிடங்களை நிரப்ப உள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணி தேர்வுக்கான எழுத்துத் தேர்வு ஹால் டிக்கெட் உரிய நேரத்தில் வெளியிடப்படும். அதில், தேர்வு தேதிகள், தேர்வு இடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும் எனவும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : கல்லூரி பேராசிரியர் ஆக விருப்பமா? இந்த அறிவிப்பு உங்களுக்குதான்!

Latest News