IBPS வங்கி அதிகாரி தேர்வு அட்மிட் கார்டு ரெடி.. எப்படி டவுன்லோடு செய்வது?
ஐ.பி.பி.எஸ் வங்கிகள் அதிகாரி தேர்வுக்கான அட்மிட் கார்டுகள் வெளியாகியுள்ளன. இதனை ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி?
இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (ஐ.பி.பி.எஸ்) ப்ரோபேஷனரி ஆபீசர்ஸ் (அதிகாரி) மெயின் தேர்வுகள் 2024க்கான ஹால் டிக்கெட்-ஐ (நுழைவுச் சீட்டு) நவ.23, 2024ஆம் தேதியன்று வெளியிட்டது. இந்தத் தேர்வில் பங்கு பெற உள்ள விண்ணப்பதாரர்கள் ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய விண்ணப்பதாரர்கள் தங்களின் பதிவு எண், ரோல் எண் மற்றும் கடவுச்சொல் அல்லது பிறந்த தேதியை உள்ளிட வேண்டும். வங்கி அதிகாரி பணிக்கான முதன்மை தேர்வு நவ.30ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.
ஹால் டிக்கெட் இல்லையென்றால்…
பிஓ மெயின்ஸ் அழைப்புக் கடிதம் 2024 நவம்பர் 30, 2024 வரை ஆன்லைனில் கிடைக்கும் என்று ஐ.பி.பிஎஸ் தேர்வு நிறுவனம், ஹால் டிக்கெட் இல்லாத விண்ணப்பதாரர்களை தேர்வு அறைக்குள் அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளது.
நவம்பர் 21 அன்று, ஐபிபிஎஸ் பிஓ முதற்கட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்று, கட்-ஆஃப் மதிப்பெண்களுக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
இதையும் படிங்க: வங்கியில் மேனேஜர் பணி.. 253 காலியிடங்கள்.. உடனே முந்துங்க!
ஹால் டிக்கெட்டை டவுண்லோடு செய்வது எப்படி?
- ஐ.பி.பி.எஸ்.-இன் ibps.in என்ற இணைய முகவரிக்கு செல்லவும்.
- ஹோம் பக்கத்தில் ஐ.பி.பி.எஸ் பி.ஓ. மெயின்ஸ் அட்மிட் கார்டு லிங்க் என்பதை கிளிக் செய்யவும்.
- புதிய பக்கம் தோன்றும். அதில் பதிவு எண், ரோல் எண் மற்றும் கடவுச்சொல் அல்லது பிறந்த தேதியை உள்ளிடவும்.
- பி.ஓ மெயின்ஸ் அட்மிட் கார்டு திரையில் தோன்றும்.
- ஹால் டிக்கெட்டில் தகவல்கள் சரியாக உள்ளதா என ஆராய்ந்து பார்த்து டவுண்லோடு செய்துக் கொள்ளவும்.
தேர்வு எப்படி இருக்கும்?
ஐ.பி.பி.எஸ் அதிகாரி முதன்மைத் தேர்வு வினாத்தாளில் ஐந்து வெவ்வேறு பிரிவுகளில் இருந்து கேள்விகள் இருக்கும். ஆங்கில மொழி, பொது/ பொருளாதாரம்/ வங்கி விழிப்புணர்வு, பகுத்தறிவு மற்றும் கணினி திறன், தரவு பகுப்பாய்வு மற்றும் விளக்கம் மற்றும் கட்டுரை எழுதுதல் அதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐ.டி.பி.ஐ வங்கியில் அக்ரி ஆபீஸர் பணி.. விண்ணப்பித்து விட்டீர்களா?