ரயில்வே லோகோ பைலட் ஹால் டிக்கெட் வந்தாச்சு.. இப்படி டவுன்லோடு பண்ணுங்க!
RRB ALP Admit Card 2024: இந்திய ரயில்வே அசிஸ்டென்ட் லோகோ பைலட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று (நவ.24, 2024) வெளியிடப்படுகிறது. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதனை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
2024 ரயில்வே லோகோ பைலட் ஹால் டிக்கெட்: 2024 நவம்பர் 28 ஆம் தேதி திட்டமிடப்பட்ட அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (ALP) தேர்வுக்கான அட்மிட் கார்டுகள் இன்று (நவ. 24, 2024) வெளியிடப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் ஆர்.ஆர்.பி எ.எல்.பி (அடிஷனல் லோகோ பைலட்) அட்மிட் கார்டை அந்தந்த ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். ஆர்.ஆர்.பி- ஏ.எல்.பி பணிக்கான கணினி அடிப்படையிலான தேர்வு நவம்பர் 25, 26, 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஒவ்வொரு தேர்வுக்கும் 4 நாள்களுக்கு முன்னதாக அட்மிட் கார்டுகள் வெளியிடப்படும். அதாவது நவம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதிகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.
ஏ.எல்.பி ஹால் டிக்கெட் வெளியீடு முக்கிய தேதிகள்
28ஆம் தேதி தேர்வுக்கான ஹால் டிக்கெட் 24ஆம் தேதி வெளியிடப்படும். தொடர்ந்து, 29ஆம் தேதி தேர்வுக்கு 25ஆம் தேதி அனுமதி அட்டை வழங்கப்படும்.
இதையும் படிங்க : IBPS வங்கி அதிகாரி தேர்வு அட்மிட் கார்டு ரெடி.. எப்படி டவுன்லோடு செய்வது?
முக்கிய குறிப்புகள்
விண்ணப்பதாரர்கள் தங்களின் ரோல் எண்கள், தேர்வு தேதி மற்றும் நேரம், அறிக்கை நேரம், தேர்வு மைய விவரங்கள் போன்றவற்றை ஹால் டிக்கெட்டில் சரிபார்க்கலாம்.
பரீட்சை நாளில், அட்மிட் கார்டின் நகலைத் தேவையான பிற ஆவணங்களுடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு கொண்டு வர வேண்டும்.
தேர்வு விவரம்
கணினி அடிப்படையிலான சோதனை சி.பி.டி 1 மற்றும் சி.பி.டி 2
கணினி அடிப்படையிலான திறன் தேர்வு (சி.பி.ஏ.டி)
ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை.
காலி பணி இடங்கள்
ஆர்.ஆர்.பி 18,799 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் காலியிடங்களுக்கு இந்த ஆட்சேர்ப்பு தேர்வை நடத்துகிறது.
அட்மிட் கார்டை டவுன்லோடு செய்வது எப்படி?
- நீங்கள் விண்ணப்பித்த ஆர்.ஆர்.பி.-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- ஏ.எல்.பி-க்கான அழைப்புக் கடிதம் பதிவிறக்க இணைப்பைத் திறக்கவும்.
- உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை வழங்கவும்
- அட்மிட் கார்டை சமர்ப்பித்து பதிவிறக்கி பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதையும் படிங்க : ஐ.டி.பி.ஐ வங்கியில் அக்ரி ஆபீஸர் பணி.. விண்ணப்பித்து விட்டீர்களா?