டி.என்.பி.எஸ்.சி ரோடு இன்ஸ்பெக்டர் தேர்வு.. ரிசல்ட்-ஐ ஆன்லைனில் செக் பண்ணுங்க!
TNPSC Road Inspector Result: தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் சாலை ஆய்வாளர் முடிவுகள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன. மொத்தம் 957 காலியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாலை ஆய்வாளர் பணிக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள், டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in இல் 2024 ஆம் ஆண்டிற்கான சாலை ஆய்வாளர் முடிவுகளைப் பார்க்கலாம். இந்தத் தகவல் டி.என்.பி.எஸ்.சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு மொத்தம் 957 காலி பணி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகளை விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் பார்ப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். இதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : ஆர்.ஆர்.பி டெக்னீஷியன் கிரேடு 3 பணி.. விண்ணப்பத்தை சரிபார்ப்பது எப்படி?
முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
- டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.inக்கு செல்லவும்.
- டி.என்.பி.எஸ்.சி சாலை ஆய்வாளர் (TNPSC Road Inspector) என்ற பக்கத்தை கிளிக் செய்யவும்.
- புதிதாக திறக்கப்பட்ட பக்கத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிடவும்.
- டி.என்.பி.எஸ்.சி சாலை ஆய்வாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.
- எதிர்கால தேவைக்காக இதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதனை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள் அதிகரிப்பு
முதலில் டி.என்.பி.எஸ்.சி 761 காலியிடங்களை நிரப்புவதை நோக்கமாக கொண்டு அறிவிக்கையை வெளியிட்டது. இந்த அறிவிக்கையில் பணி இடங்கள் பின்னாள்களில் அதிகரிக்கப்பட்டன. அதன்படி, காலி பணியிடங்களின் எண்ணிக்கை 957 ஆக உயர்ந்தது என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க : டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு