IBPS Clerk Vacancy: பொதுத்துறை வங்கிகளில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்..
Bank Job: ஐபிபிஎஸ் நடத்தும் வங்கியில் கிளர்க் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கிகளில் காலியாக உள்ள 6,128 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 20 வயது நிரம்பி இருக்க வேண்டும். மேலும் அதிகபட்சமாக 28 வயது நிரம்பி இருக்க வேண்டும். பழங்குடியின மற்றும் பட்டியலின (எஸ்.சி/எஸ்.டி) பிரிவினருக்கு மேலும் 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு கூடுதலாக 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 10 வருடங்கள் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வங்கி வேலை: ஐபிபிஎஸ் நடத்தும் வங்கியில் கிளர்க் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டில் உள்ள 11 பொதுத்துறை வங்கிகளுக்கான காலி பணியிடங்கள் ஐபிபிஎஸ் நடத்தும் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், நடப்பாண்டில் இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் வங்கி , சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, யுகோ வங்கி, பேங்க் ஆப் மகராஷ்டிரா உள்ளிட்ட 11 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 6,128 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 665 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு இன்று முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:
இந்த தேர்வில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 20 வயது நிரம்பி இருக்க வேண்டும். மேலும் அதிகபட்சமாக 28 வயது நிரம்பி இருக்க வேண்டும். பழங்குடியின மற்றும் பட்டியலின (எஸ்.சி/எஸ்.டி) பிரிவினருக்கு மேலும் 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு கூடுதலாக 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 10 வருடங்கள் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து டிகிரி சான்றிதழ் தேவை. அதே சமயம் கணினி பயிற்சி சார்ந்த டிப்ளமோ அல்லது சான்றிதழ் வேண்டும். முக்கியமாக நீங்கள் எந்த மாநிலத்தில் விண்ணப்பிக்கிறீர்களோ அந்த மாநில மொழி திறன் தேவை.
Also Read: ஆசையாக ஆர்டர் செய்த பிரியாணி.. தயிர் பச்சடியில் இருந்த புழுவால் அதிர்ச்சி..!
வங்கி கிளர்க் பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் , திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதத்தில் இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு ஒவ்வொரு பகுதிக்கும் 20 நிமிடங்கள் என மொத்தம் 1 மணி நேரம் ஆகும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெருபவர்கள் மட்டுமே முதன்மை தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்.
முதன்மைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம், திறனறிதல், கணிதம் மற்றும் பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial Awareness) என மொத்தம் 190 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம் 40 நிமிடங்கள். இரண்டு தேர்வுகளும் ஆன்லைன் முறையில் நடத்தப்படும். இப்பணியிடங்களுக்கு https://ibpsonline.ibps.in/crpcl14jun24/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு https://www.ibps.in/ என்ற இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: மெட்ரோ ரயிலில் குவியும் மக்கள்.. ஒரே மாதத்தில் 84 லட்சம் பேர் பயணம்..!