IBPS SO Recruitment: டிகிரி இருக்கா? பொதுத்துறை வங்கிகளில் கொட்டிக்கிடக்கும் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!
இந்தியாவில் 12 பொதுத்துறை வங்கிகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா பேங்க், இந்தியன் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 12 பொதுத்துறை வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் ஐபிபிஎஸ் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.
பொதுத்துறை வங்கிகளில் வேலை: இந்தியாவில் 12 பொதுத்துறை வங்கிகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா பேங்க், இந்தியன் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 12 பொதுத்துறை வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் ஐபிபிஎஸ் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 11 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 884 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம். இது குறித்த கூடுதல் விவரங்களை கீழ்கண்டவாறு பார்க்கலாம்.
பணி விவரம்:
சிறப்பு அதிகாரி, ஐடி அதிகாரிகள், Agriculture Filed officer, Rajbhasha Adhikari, சட்டத்துறை அதிகாரி, மனிதவள மேம்பாட்டு அதிகாரி, மார்க்கெட்டிங் அதிகாரி ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்ல போகாதீங்க.. உடனே பாருங்க!
கல்வித்தகுதி:
- ஐடி அதிகாரி பணிக்கு நான்கு ஆண்டு பொறியியல் படிப்பில் (Engineering/Computer Application, IT, Electronics, Electronics and Telecommunication) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Agriculture Field Officer பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை மருத்துவம், மீனவள மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Rajbhasha Officer பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இந்தி துறையில் முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும். ஆங்கில மொழியும் பயின்று இருக்க வேண்டும் அல்லது சமஸ்கிருத மொழியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Law Officer பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டம் படித்திருக்க வேண்டும். மேலும் பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
- Marketing Officer பணிக்கு விண்ணப்பிக்க அங்கீரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் துறையில் எம்.பி.ஏ படித்திருக்க வேண்டும்
- HR/Personal Officer பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Personal Management துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது விவரம்:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விரும்புவர்கள் 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
தேர்வு செய்வது எப்படி?
மேற்கண்ட பணிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதல்நிலை, முதன்மை தேர்வுகள் கணினி வழியாக நடத்தப்படும். இந்த தேர்வுகள் டிசம்பர், நவம்பரில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கொண்டு இறுதி தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
Also Read: உஷார் மக்களே.. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… எந்தெந்த மாவட்டங்கள்?
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த பணிகளுக்கு https://www.ibps.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் பொதுப் பிரிவினர், ஓபிசி, EWS பிரிவினருக்கு ரூ.850 செலுத்த வேண்டும். பழங்குடியின, பட்டியலின பிரிவினருக்கு ரூ.175 செலுத்த வேண்டும்.