Chennai Jobs : +2 தேர்ச்சி போதும்.. சென்னையில் சூப்பரான வேலை.. உடனே அப்பை பண்ணுங்க!

ஐசிஎஃப் தொழில்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, இதற்கு தகுதியும், விருப்படும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்க்கலாம்.

Chennai Jobs : +2 தேர்ச்சி போதும்.. சென்னையில் சூப்பரான வேலை.. உடனே அப்பை பண்ணுங்க!

வேலை (picture credit : Getty)

Updated On: 

17 Nov 2024 11:37 AM

சென்னை பெரம்பூரில் பொதுத்துறை நிறுவனமாக ஐசிஎஃப் செயல்பட்டு வருகிறது. இதில் ரயில் பெட்டிகள் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. ஐசிஎஃப்பில் அவ்வப்போது காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும். அந்த வகையில், தற்போது ஐசிஎஃப் தொழில்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, இதற்கு தகுதியும், விருப்படும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்க்கலாம்.

பணி விவரம்:

பொதுத்துறை நிறுவனமான ஐசிஎப் தொழில்சாலையில் 25 காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, தடகளம், கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கான காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெண்கள், ஆண்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதுல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஜூனியர் கிளார்க் பணிக்கு 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டெக்னிஷன் கிரேடு பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட துறையில் பட்டப்படிப்பு அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும். இதோடு, விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

Also Read : டிகிரி முடித்தவரா? ரூ. 1 லட்சம் வரை சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கண்ட பணிக்கு எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பின்பு, மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் https://pb.icf.gov.in/index.php என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்த வேண்டும். அதாவது, பொது பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். மேலும், எஸ்டி, எஸ்சி, பெண்கள், EWS பிரிவினர் விண்ணப்ப கட்டணம் ரூ.250 செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Also Read : ஐ.டி.ஐ, டிப்ளமோ கல்வித் தகுதி.. இந்திய விமானப் படையில் அப்ரெண்டிஸ் பணிக்கு அழைப்பு!

முக்கிய நாட்கள்

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் வரும்  டிசம்பவர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தலையணை உறையை மாற்றாமல் இருந்தால் என்னாகும்?
30 வயதுக்கு பிறகும் முகத்தில் முகப்பரு எதனால் ஏற்படுகிறது..?
பெற்றோரிடம் குழந்தைகள் ரகசியமாக தெரிந்து கொள்ளும் விஷயங்கள்!
நீங்கள் வேலை பார்க்கும் இடம் சரியானதா? - அறிய டிப்ஸ் இதோ!