Bank Jobs: வங்கியில் வேலை.. மாதம் ரூ.31,000 சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

IDBI Recruitment 2024 : ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 1000 பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்க்கலாம்.

Bank Jobs: வங்கியில் வேலை.. மாதம் ரூ.31,000 சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ஐடிஐபி வங்கி

Updated On: 

14 Nov 2024 14:01 PM

ஆண்டுதோறும் பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகும். அந்த வகையில் ஐடிபிஐ வங்கியில் உள்ள காலி இடங்கள் நிரப்பப்படுகின்றன. ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 1000 பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்க்கலாம்.

பணி விவரம்

ஐடிபிஐ வங்கியில் Executive sales and operations பணியில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படுகின்றன. அதாவது, Executive sales and operations பணிக்கு 1000 பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப்பிரிவில் 448 இடங்களும், எஸ்டி பிரிவி 127 இடங்களும், எஸ்சி பிரிவில் 94 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 231 இடங்களும், EWS பிரிவில் 100 இடங்களும், PWBD பிரிவில் 40 இடங்களும் நிரப்பப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Also Read : +2 முடித்தவரா? அரசு மருத்துவமனையில் வேலை.. மாதம் ரூ.20,000 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

கல்வித்தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும், கணினி திறன் அவசியமாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு

ஐடிபிஐ வங்கி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 20 வயது முதல் 25 வயது வரை இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி, பட்டியலின, பழங்குடி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருககு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

சம்பளம்

மேற்கண்ட பணிக்கு தேர்வு ஆகுபவர்களுக்கு முதல் வருடம் மாத சம்பளமாக ரூ.29,000 வழங்கப்படும். இரண்டாம் வருடம் ரூ.31,000 மாத சம்பளமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பணி ஒரு வருடம் என ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கண்ட பணிகளுக்கும் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணிக்கு அமர்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

மேற்கண்ட பணிகளுக்கு https://www.idbibank.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு உரிய தகவல்களை உள்ளீட்டு விண்ணப்பிக்க செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.1,050 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 மட்டும் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Also Read : டிகிரி முடித்தவரா? உள்ளூரிலேயே அரசு வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

முக்கிய நாட்கள்

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் செப்டம்பர் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு டிசம்பர் 1ஆம் தேதி ஆன்லைன் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?