5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Jobs: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. சென்னையில் சூப்பரான வேலை.. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!

Income Tax Recruitment: சென்னை மற்றும் புதச்சேரியில் வருமான வரி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படும். அந்த வகையில் வருமான வரிதுறையின் சென்னை மற்றும் புதுச்சேரி கிளையில் உள்ள கேண்டீன் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு இந்த மாதம் 7ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

Chennai Jobs: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. சென்னையில் சூப்பரான வேலை.. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!
வருமான வரி அலுவலகம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 21 Sep 2024 08:00 AM

சென்னை மற்றும் புதச்சேரியில் வருமான வரி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படும். அந்த வகையில் வருமான வரிதுறையின் சென்னை மற்றும் புதுச்சேரி கிளையில் உள்ள கேண்டீன் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு இந்த மாதம் 7ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரே நாளே உள்ள நிலையில், உங்களுக்கு நினைவுப்படுத்துகிறோம். எனவே, இந்த பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து கொள்ளுங்கள். இன்னும் ஒருநாள் தான் இருப்பதால் தாமதப்படுத்தாமல் விண்ணப்பித்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பணி விவரம்:

வருமான வரிதுறையின் சென்னை மற்றும் புதுச்சேரி கிளையில் உள்ள கேண்டீன் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மொத்தம் 25 பேர் நிரப்பப்பட உள்ளன. பொதுப் பிரிவில் 13 பேருக்கும், ஒபிசி பிரிவில் 6 பேருக்கும், EWS பிரிவில் 2 பேருக்கும், பட்டியிலன பிரிவில் 3 பேருக்கும், பழங்குடி பிரிவு, மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட உள்ளது.

Also Read: 12ஆம் வகுப்பு தேர்ச்சியா? மத்திய அரசு வேலை.. விண்ணப்பிப்பது எப்படி?

கல்வித்தகுதி:

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது விவரம்:

மேற்கண்ட பணிக்கும் விண்ணப்பிப்பவர்கள் 22.09.2024 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 25 வயது இருக்க வேண்டும். அரசின் விதிப்படி, பட்டியலின, பழங்குடி பிரிவுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் படை வீரர்களுக்கு 03 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படுகிறது.

சம்பளம்:

வருமான வரி அலுவலகத்தில் கேண்டீன் உதவியாளர் பணிக்கு மாத சம்பளமாக  ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணிக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும். இதன் மதிப்பெண் அடிப்பயில் தேர்வானவர்களின் பட்டியலில் வெளியிடப்படும். அதன்பின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு https://www.tnincometax.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் https://www.tnincometax.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று மெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை உள்ளீட்டு நுழைய வேண்டும். பின்னர்,அதில் கேட்கப்பட்ட விவரங்களையும் பூர்த்தி செய்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், முன்னாள் படை, மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான சான்றிதழ், பாஸ்போர்ட் புகைப்படம், கையெழுத்து, ஆதார், பான், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை விண்ணப்பிக்கும்போது சமர்ப்பிக்க வேண்டும்.

Also Read: டிகிரி முடித்தவரா? மத்திய அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!

முக்கிய நாட்கள்:

இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கு 22.09.2024 கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வானவர்களின் பட்டியல் 01.10.2024 அன்று வெளியிடப்படும். எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் 01.10.2024 முதல் 05.10.2024-க்குள் வெளியாகும். எழுத்துத் தேர்வு 06.10.2024 அன்று நடைபெறும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  எனவே கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு விரைவில் விண்ணப்பித்து கொள்ளுங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News