5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Post Office GDS Recruitment 2024: தபால் துறையில் செம்ம வேலை.. 10வது தேர்ச்சி போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க!

மத்திய தகவல் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால் துறை இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக தபால் துறையில் GDS எனும் பணியிடங்களுக்கு தேர்வு எதுவும் இல்லாமல் பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது.

Post Office GDS Recruitment 2024: தபால் துறையில் செம்ம வேலை.. 10வது தேர்ச்சி போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க!
தபால் துறையில் வேலை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 16 Jul 2024 08:52 AM

தபால் துறையில் வேலை: மத்திய தகவல் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால் துறை இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக தபால் துறையில் GDS எனும் பணியிடங்களுக்கு தேர்வு எதுவும் இல்லாமல் பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. இந்த பணியிடத்திற்கு ஒவ்வொரு ஆண்டு இளைஞர்கள் பலரும் காத்துக்கொண்டிருப்பார்கள். நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் காலியாக உள்ள கிராமின் தாக் சேவக் (Gramin Dak Servaks) பணியிடங்களானது.  இதன் மூலம் பிபிஎம் (Branch Post Master), ஏபிபிஎம் (Assistant Branch Postmaster) போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. சுமார் 44 ஆயிரம் ஜிடிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தபால் துறை வெளியிட்டிருக்கிறது.

Also Read: தேர்வு எதுவும் இல்லை.. 8ஆம் வகுப்பு முடித்தாலே வேலை.. உடனே அப்ளே பண்ணுங்க!

பணி விவரம்:

பிபிஎம் (Branch Post Master), ஏபிபிஎம் (Assistant Branch Postmaster) பணியிடங்களில் மொத்தம் 44,228 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில் 3,789 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித்தகுதி:

அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்தந்த மண்டலங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் மாநிலங்களின் உள்ளூர் மொழி பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியம். சுய தொழில் செய்பவர்கள், வேலை தேடுபவர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் தகுதியுள்ள அனைவருக்கு இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

கிராமின் தாக் சேவக் பணியிடத்திற்கு வயது வரம்பானது 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வும் வழங்கப்படுகிறது. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

ஊதியம்:

Branch Post Master பணிக்கு மாத ஊதியமாக ரூ.12,000 முதல் ரூ.29,380 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Assistant Branch Postmaster பணிக்கு மாத ஊதியமாக ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மூலம் மெரிட் லிஸ்ட் வைத்து தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர், அந்த மெரிட் லிஸ்டின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். எனவே, பத்தாம் வகுப்பில் 470 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருந்தால் நிச்சியமாக விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

  • முதலில் https://indiapostgdsonline.gov.in/  என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • அதில் உங்கள் மொபைல் நம்பர், இமெயில் ஆகியவற்றை உள்ளீட்டு பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • இதன்பின் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்தும்போது விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கில் இருந்து தொகையை எடுத்துக் கொண்ட பின் எந்த உறுதிப்படுத்தலும் கிடைக்கவில்லை என்றால் விண்ணப்பதாரர் பதிலுக்காக 72 மணி நேரம் காத்திருக்கலாம்
  • கட்டணத்தை செலுத்தியபிறகு விண்ணப்பிக்கலாம். உங்களுக்கு விருப்பமுள்ள அஞ்சல அலுவலகங்களை சமர்ப்பிக்கவும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன் புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கையொப்பத்தைப் பதிவேற்ற வேண்டும்.
  • விண்ணப்பத்தை சரி பார்த்துவிட்டு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளலாம்.

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100 வழங்கப்படுகிறது. பழங்குடியின/பட்டியிலன பிரிவினர், மகளிர், திருநங்கை ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. கட்டணத்தை ஆன்லைன் அல்லது மாநில/மாவட்டங்களில் உள்ள அனைத்து தபால் அலுவலகத்திலும் நேரடியாக பணம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.08.2024

Also Read: மாதம் ஒரு லட்சம் வரை சம்பளம்.. தமிழக அரசின் சூப்பர் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

Latest News