Indian Bank Recruitment: டிகிரி முடித்தவரா? 300 காலி இடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க!
Indian Bank Jobs: மத்திய அரசின் கட்டுப்பாடின் கீழ் ஏராளமான பொதுத்துறை வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இதற்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ஐபிபிஎஸ் மூலமாகவும், விண்ணப்பங்கள் அடிப்படையிலும், நேரடியாகவும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியன் வங்கியில் வேலை: மத்திய அரசின் கட்டுப்பாடின் கீழ் ஏராளமான பொதுத்துறை வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இதற்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ஐபிபிஎஸ் மூலமாகவும், விண்ணப்பங்கள் அடிப்படையிலும், நேரடியாகவும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியன் வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரிகள் பதவியில் 300 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிராக, குஜராத் ஆகிய மாநிலத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்படுகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 160 இடங்கள் நிரப்பப்படுகிறது.
பணி விவரம்:
இந்தியன் வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரிகள் (Local Bank Officer) பதவியில் 300 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 160, கர்நாடகாவில் 35, ஆந்திராவில் 50, மகாராஷ்டிராவில் 40, குஜராத்தில் 15 என மொத்தம் 300 இடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 169 காலிப் பணியிடங்கள் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 24 இடங்கள், எஸ்டி பிரிவினருக்கு 12 இடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 42 இடங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 43 இடங்கள், பொது பிரிவினருக்கு 65 இடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 6 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
Also Read: 12ஆம் வகுப்பு தேர்ச்சியா? உடனை அப்ளை பண்ணுங்க.. நாளை தான் கடைசி நாள்!
கல்வித்தகுதி:
மேற்கண்ட பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், பட்டப்படிப்பிற்கான மதிப்பெண்கள் சான்றிதழ், டிகிரி சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ற மொழி தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். மேலும், எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது-
சம்பளம்:
மேற்கொண் பணிக்கு மாத சம்பளமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
மேற்கொண்ட பணிகளுக்கு தகுதியானர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நேர்காணாமல் வைக்கப்படும். தேவைப்பட்டால் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?
என்ற இணையதளத்தை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும. விண்ணப்ப கட்டமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.1000, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு, PWBD ஆகியோருக்கு ரூ.175 கட்டணமாக செலுத்த வேண்டும்.
Also Read: டிகிரி இருக்கா? பொதுத்துறை வங்கிகளில் கொட்டிக்கிடக்கும் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!
முக்கிய தேதி:
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 2ஆம் தேதி (02.09.24) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.