Indian Navy Jobs: டிகிரி முடித்தவரா? மத்திய அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!
இந்திய கடற்படையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகும். அந்த வகையில் தற்போது இந்திய கடற்படையில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, விமானி, பொது சேவை உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்திய கடற்படையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகும். அந்த வகையில் தற்போது இந்திய கடற்படையில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, விமானி, பொது சேவை உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது உள்ளிட்ட விவரங்களை கீழ்கண்டவாறு பார்ப்போம்.
பணி விவரம்:
இந்திய கடற்படையில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, பொது சேவை, பைலட்/நேவல் ஏர் ஆபரேஷன்ஸ் அதிகாரி/ ஏர் டிராஃபிக் கன்ட்ரோலர், தளவாடங்கள் , நேவல் ஆர்மமென்ட் இன்ஸ்பெக்டரேட் கேடர், கல்வி, பொறியியல் பிரவு ஆகிய பணியிடங்களில் மொத்தம் 250 காலிப்பணியிடங்கள் உள்ளன. பொது சேவை பணிக்கு 56, பைலட்/நேவல் ஏர் ஆபரேஷன்ஸ் அதிகாரி/ ஏர் டிராஃபிக் கன்ட்ரோலர் 65, தளவாடங்கள் 20, நேவல் ஆர்மமென்ட் இன்ஸ்பெக்டரேட் கேடர் 16, கல்வி 15,
பொறியியல் பிரிவு 36, மின்கிளை பொதுவேலை 42 பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: அறநிலையத்துறையில் வேலை.. 8ஆம் தேதி தேர்ச்சி போதும்.. உடனே செக் பண்ணுங்க!
கல்வித்தகுதி:
- பொது சேவை பணிக்கு றைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பிரிவில் BE/ B.Tech படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10 மற்றும் 12ஆம் வகுப்பில் ஆங்கிலத்தில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
- Logistics பணிக்கு BE/ B.Tech, MBA, B.Sc/ B.Com/ B.Sc.(IT), MCA/ M.Sc (IT) படித்திருக்க வேண்டும்.
- நேவல் ஆர்மமென்ட் இன்ஸ்பெக்டரேட் கேடர் (NAIC) பணிக்கு BE/B.Tech குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல்,மெக்கானிக்கல் உடன் ஆட்டோமேஷன், எலக்ட்ரிக்கல், லக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன்,எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்,எலெக்ட்ரானிக்ஸ் & டெலி கம்யூனிகேஷன்,இன்ஸ்ட்ரமண்டேஷன் & கன்ட்ரோல், இன்ஜினியரிங் உள்ளிட்ட துறை சார்ந்த படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10 மற்றும் 12ஆம் வகுப்பில் ஆங்கிலத்தில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
- பொறியியல் பணிக்கு BE/ B.Tech குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மெக்கானிக்கல், தொழில்துறை பொறியியல் மற்றும் மேலாண்மை, ஏரோ ஸ்பேஸ், ஆட்டோமொபைல்கள் உள்ளிட்ட துறை சார்ந்து படித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.
வயது வரம்பு:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 02.07.2000 முதல் 01.01.2006 வரை வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. கல்வி பணிக்கு மட்டும் 02.07.1998 முதல் 01.07.2004 வரை பிறந்தவராக இருக்க வேண்டும். மேலும், திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் கல்வித்தகுதியின் அடிப்படியில் தேர்வு செய்ய்ப்படுபவர்களுக்கு நேர்காணல் நடைபெறும். இதன் அடிப்படையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
சம்பளம்:
மேற்கண்ட பணிகளுக்கு ரூ.31,250 பயிற்சி காலத்தில் வழங்கப்படும். அதன் பிறகு பணிகளுக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் என்ற இணையதளத்திற்கு செல்லவும். அங்கு முகப்பு பக்கத்தில் இந்திய கடற்படை ஆட்சேர்ப்பு 2024 என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும். பிறகு, அதில் கேட்கப்பட்ட விவரங்களையும், ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் submit ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். உங்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
Also Read: 12ஆம் வகுப்பு தேர்ச்சியா? மத்திய அரசு வேலை.. விண்ணப்பிப்பது எப்படி?
முக்கிய நாட்கள்:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பதற்கு வரும் 29ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும். எனவே, இன்னும் 10 நாட்கள் தான் உள்ள நிலையில், உடனே விண்ணப்பித்து கொள்ளுங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.