5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Indian Railways: காலி பணியிடங்களில் முன்னாள் ஊழியர்கள்.. ரயில்வே முடிவுக்கு பெருகும் எதிர்ப்பு!

ரயில்வே வாரியத்தின் இந்த உத்தரவால் ரயில்வே வேலையை கனவாக எண்ணி முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக ரயில்வே நிர்வாகம் திகழ்ந்து வருகிறது. பேருந்து கூட செல்லாத கடைகோடி கிராமத்தில் கூட ரயில்வே பாதை அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்கேற்ப பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், தேஜஸ்,வந்தே பாரத், ராஜ்தானி என பல வகைகளில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

Indian Railways: காலி பணியிடங்களில் முன்னாள் ஊழியர்கள்.. ரயில்வே முடிவுக்கு பெருகும் எதிர்ப்பு!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 19 Oct 2024 12:10 PM

ரயில்வே வேலை: நாடு முழுவதும் காலியாக உள்ள ரயில்வே பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி  ரயில்வே துறையில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் பணியை மறுத்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த முடிவிற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த முடிவு பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமீபகாலமாக நாடு முழுவதும் தொடர்ச்சியாக ரயில் விபத்துக்கள் நிகழ்ந்து வருகிறது. இதனை தவிர்க்க இந்திய ரயில்வே துறை பலவிதமான நடவடிக்கைகள் எடுத்தும் பலனளிக்காமல் உள்ளது. ரயில்வேயில் தற்போது பணியாற்றும் ஊழியர்களின் போதிய அனுபவமின்மையே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரயில்வே துறை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும், ரயில் விபத்துகளை  குறைக்கும் வகையில் காலி பணியிடங்களில் ஏற்கனவே பணியாற்றி ஓய்வுப்பெற்றவர்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், “நல்ல உடல் தகுதியுடன் கூடிய ஓய்வுக்கு முந்தைய ஐந்து ஆண்டுகள் பணியில் நன்னடத்தில் சான்று பெற்ற ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாத 65 வயதுக்குட்பட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை மீண்டும் பணியமர்த்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில் லோகோ பைலட், தண்டவாள பராமரிப்பு பொறியாளர், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் நிரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் நல்ல உடல் தகுதியுடன் இருந்தாலும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஊழியர்களை எக்காரணம் கொண்டும் பனிமரத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: தமிழ் எங்கள் மூச்சு.. ஆனால் உங்க வரலாறு?.. ஆளுநரை விளாசிய முதலமைச்சர் ஸ்டாலின்!

ரயில்வே வாரியத்தின் இந்த உத்தரவால் ரயில்வே வேலையை கனவாக எண்ணி முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக ரயில்வே நிர்வாகம் திகழ்ந்து வருகிறது. பேருந்து கூட செல்லாத கடைகோடி கிராமத்தில் கூட ரயில்வே பாதை அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்கேற்ப பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், தேஜஸ்,வந்தே பாரத், ராஜ்தானி என பல வகைகளில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னை, மும்பை போன்ற பெரு நகரங்களில் நகர்ப்புற மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தவிர்த்து விழா காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அதிக அளவில் லாபமிட்டும் ரயில்வே துறையில் காலி பணியிடங்கள் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்படுவது வழக்கம். சமீபத்தில் கூட ரயில்வே வேலைகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு முடிவடைந்து இருந்தது. இந்த நிலையில் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள காலி பணியிடங்கள் நிரப்பும் அறிவிப்பு லட்சக்கணக்கான தேர்வர்களின் எண்ணங்களில் மண்ணை அள்ளி போட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு விரைவில் நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என பலரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Also Read: ஒரே நாளில் 6 முருகன் கோயில்.. தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்து இயக்கம்!

மாற்றம் கொண்டு வந்த ரயில்வே துறை!

ரயிலில் பயணம் செய்வது பொதுமக்களின் விருப்பத்திற்குரிய ஒன்றாக உள்ளது. குறைந்த கட்டணம், பாதுகாப்பான பயணம் மற்றும் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்தில் செல்வது போன்ற பல காரணங்களுக்காக பலரின் பயணத் தேர்வாக ரயில்கள் இருந்து வருகிறது. தொலைதூரம் செல்லக்கூடிய ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யக்கூடிய முறை அமலில் இருந்து வந்தது. இதனால் எந்த ரயிலை எடுத்தாலும் 120 நாட்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவே தொடர்ச்சியாக காட்டப்பட்டு வந்ததால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர். மேலும் தட்கல் முறையில் முன்பதிவு செய்தாலும் டிக்கெட்கள் கிடைப்பதில்லை என புலம்பி தீர்த்தனர்.

ரயில்வே வாரியம் இது தொடர்பாக உரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் தொடர் கோரிக்கையாக இருந்து வந்தது. தற்போது பண்டிகை காலம் தொடங்கிவிட்ட நிலையில் தீபாவளி, பொங்கல் என எந்த ஒரு பண்டிகைக்கும் தொலைதூரம் செல்லக்கூடிய ரயில்களில் டிக்கெட்டுகள் இல்லாத சூழல் உண்டாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அரசு பேருந்துகளிலும், அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இயக்கப்படும் தனியார் பேருந்துகளிலும் பயணம் செய்யும் சூழல் உண்டாக்கி உள்ளது.

இந்த நிலையில் தான் பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் 120 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து வரும் முறை சில தினங்களுக்கு முன் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி முன்பதிவு செய்யும் காலம் 60 நாட்களாக குறைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வெளிநாட்டு பயணிகளுக்கு பொருந்தாது எனவும், அவர்கள் 365 நாட்களுக்கு முன்பதாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News