ஓட்டுநர் வேலை.. மாதம் ரூ.40,000 சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க.. உடனே அப்ளை பண்ணுங்க!

ITBP Constable Recruitment 2024: இந்தோ திபெத் எல்லை காவல் படையில் உள்ள கான்ஸ்டபிள் (டிரைவர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்ப்போம்.

ஓட்டுநர் வேலை..  மாதம் ரூ.40,000 சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க.. உடனே அப்ளை பண்ணுங்க!

வேலைவாய்ப்பு (image credit: Getty)

Updated On: 

18 Oct 2024 13:13 PM

இந்திய பாதுகாப்பு படைகளில் ஒன்றாக இந்தோ-திபெத் காவல்படை (The Indo – Tibetan Border Police) உள்ளது. இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இங்கு ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படுகிறது. இங்கு காவல்படை மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளிலும் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இந்தோ திபெத் எல்லை காவல் படையில் உள்ள கான்ஸ்டபிள் (டிரைவர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்ப்போம்.

பணி விவரம்

இந்தோ திபெத் எல்லை காவல் படையில் உள்ள கான்ஸ்டபிள் (டிரைவர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கான்ஸ்டபிள் (டிரைவர்) பணிக்கு 545 காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஆண்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். பொதுப்பிரிவில் 209 பணியிடங்களும், எஸ்சி பிரிவில் 77 பணியிடங்களும், எஸ்டி பிரிவில் 40, ஒபிசி பிரிவில் 164, EWS பிரிவில் 55 என மொத்தம் 545 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

Also Read: டிகிரி முடித்தவரா? ரூ.70,000 சம்பளம்.. தமிழக சுற்றுலாத் துறையில் அட்டகாசமான வேலை!

கல்வித்தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் குறைந்தப்பட்சம் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், கனராக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வயது விவரம்

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 21 வயதை கடந்திருக்க வேண்டும். மேலும் 27 வயதை வரை இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவ படை வீரர்களுக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி முன்னாள் ராணுவ படை வீரர்களுக்கு 8 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படுகிறது.

மாத சம்பளம்

மத்திய அரசின் 7வது ஊதிய முறைகள்படி, நிலை – 3 ரூ.21,000 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு உடல் திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதன் அடிப்படையில் தேர்வானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் https://recruitment.itbpolice.nic.in/rect/index.php என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் https://recruitment.itbpolice.nic.in/rect/index.php  என்ற இணையதளத்தில் சென்று அங்கு முகப்பில் Apply என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அங்கு விண்ணப்ப விண்ணப்ப படிவம் இருக்கும். எனவே, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்தும், தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்தி விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

Also Read: வேலை இல்லையா? அரசு தரும் ரூ.7200 உதவித்தொகை.. மிஸ் பண்ணாதீங்க.. உடனே அப்ளை பண்ணுங்க!

விண்ணப்பிக்க கடைசி தேதி

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அடுத்த மாதம் நவம்பர் 6ஆம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!