ITBP-யில் சப்-இன்ஸ்பெக்டர் பணி.. மாத சம்பளம் ரூ.92 ஆயிரம்.. விண்ணப்பிப்பது எப்படி?

ITBP Recruitment 2024: இந்தோ திபெத்திய எல்லைக் காவல் (ITBP) படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ITBP-யில் சப்-இன்ஸ்பெக்டர் பணி.. மாத சம்பளம் ரூ.92 ஆயிரம்.. விண்ணப்பிப்பது எப்படி?

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் வேலை வாய்ப்பு

Updated On: 

15 Nov 2024 11:59 AM

ITBP Recruitment 2024: இந்தோ-திபெத்தியன் எல்லைக் காவல் படை (ITBP) குரூப் ‘சி’ பிரிவில் உதவி சப்-இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள் மற்றும் கான்ஸ்டபிள் போன்ற பணி இடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீங்கள் 12 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு வேலையைத் தேடுகிறீர்களானால், இது உங்களுக்கு ஓர் சிறந்த வாய்ப்பாக இருக்கும். இந்தப் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ ஐ.டி.பி.பி இணையதளம் வாயிலாக தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.

வயது தகுதி

உதவி சப் இன்ஸ்பெக்டர் (ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்) மற்றும் உதவி சப் இன்ஸ்பெக்டர் (ரேடியோகிராபர்) பணிகளுக்கு விண்ணப்பிக்க 20 வயது முதல் 28 வயது வரையிலும் வயது இருத்தல் வேண்டும். மற்ற அனைத்து பணிகளுக்கும் வயது, 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி இடங்கள்

காவல் உதவி ஆய்வாளர் (லேப் டெக்னீசியன் – 7)
காவல் உதவி ஆய்வாளர் (ரேடியோகிராபர் -3)
காவல் உதவி ஆய்வாளர் (ஓடி டெக்னீசியன் – 1)
காவல் உதவி ஆய்வாளர் (பிசியோதெரபிஸ்ட் – 1)
தலைமை காவலர் (சி.எஸ்.ஆர் அசிஸ்டன்ட் -1)
தலைமை காவலர் (பியூன்- 1)
தலைமை காவலர் (ரிசப்சனிஸ்ட் – 2)
தலைமை காவலர் (டிரெஸர்-3)
தலைமை காவலர் (ஆடை பிரிவு – 1)
மொத்த பணி இடங்கள் 20

இதையும் படிங்க: TNPSC Group 4: குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

விண்ணப்ப கட்டணம்

பொது, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் (ஒபிசி), பொருளாதாரத்தில் பின்தங்கிய (இ.டபிள்யூ.எஸ்) பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, பெண்கள், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்

லெவல் 5 பிரிவில் ரூ.29-200 முதல் ரூ.92,300 வரையும், லெவல் 4ல் ரூ.25,500 முதல் ரூ.81,100ம், லெவல் 3 பிரிவில் ரூ.21,700 முதல் ரூ.69100 வரையும் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

உடற் மற்றும் திறன் தகுதி, எழுத்துத் தேர்வு, அசல் ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ தகுதிக்கு பின்னர் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி தேதி

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பங்களை சமர்பிக்க நவ.26, 2024 கடைசி தேதியாகும். விண்ணப்பதாரர்கள் விரிவான தகவலுக்கு ஐ.டி.பி.பி அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

இதையும் படிங்க: போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி.. எப்படி விண்ணப்பிக்கலாம்? தகுதி என்ன? முழு விவரம்..

தோல்வியில் இருந்து எளிதாக மீள்வது எப்படி?
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள்!
கிராம்பை வாயில் வைத்து தூங்கலாமா?
3 வேளை சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?