ITBP Constable Recruitment 2024: 10ஆம் வகுப்பு தேர்ச்சியா? மாதம் ரூ.70,000 சம்பளம்.. சூப்பரான வேலை! - Tamil News | ITP constable recruitment 2024 apply for 819 kitchen service post check the details tamil | TV9 Tamil

ITBP Constable Recruitment 2024: 10ஆம் வகுப்பு தேர்ச்சியா? மாதம் ரூ.70,000 சம்பளம்.. சூப்பரான வேலை!

Published: 

14 Sep 2024 14:14 PM

இந்திய பாதுகாப்பு படைகளில் ஒன்றாக இந்தோ-திபெத் காவல்படை ((The Indo - Tibetan Border Police) உள்ளது. இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இங்கு ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படுகிறது.

ITBP Constable Recruitment 2024: 10ஆம் வகுப்பு தேர்ச்சியா? மாதம் ரூ.70,000 சம்பளம்.. சூப்பரான வேலை!

வேலைவாய்ப்பு அறிவிப்பு (Picture Credit: Getty)

Follow Us On

இந்திய பாதுகாப்பு படைகளில் ஒன்றாக இந்தோ-திபெத் காவல்படை (The Indo – Tibetan Border Police) உள்ளது. இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இங்கு ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படுகிறது. இங்கு காவல்படை மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளிலும் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பை இந்தோ-திபெத்திய எல்லை காவல்படை வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உடையவர்கள் உடனே விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும், இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்கள் விரிவாக பார்ப்போம்.

பணி விவரம்:

இந்தோ – திபெத்திய எல்லையில் கான்ஸ்டபிள் (kitchen Service) வேலைக்கான அறிவிப்பை இந்தோ – திபெத்திய எல்லை காவல்படை வெளியிட்டுள்ளது. இதற்கு மொத்தமாக 819 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு 697 பணியிடங்களும், பெண்களுக்கு 122 பணியிடங்கள் என மொத்தம் 819 இடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் பொதுப்பிரிவினர் பிரிவுக்கு 458 பணியிடங்களும், பட்டியலின பிரிவினருக்கு 48 பணியிடங்களும், பழங்குடியின பிரிவினருக்கு 70 பணியிடங்களும், ஒபிசி பிரிவினருக்கு 162 பணியிடங்களும், EWS பிரிவினருக்கு 81 பணியிடங்களும் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஐடிஐ மாணவர்களே.. உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி வேண்டுமா?

கல்வித்தகுதி:

இந்த பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் குறைந்தது 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் இருந்து உணவு உற்பத்தி தொடர்பான சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயதில் இருந்து 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொது பிரிவில் உள்ள முன்னாள் படை வீரர்களுக்கு 6 ஆண்டுகளும், பட்டியலின/பழங்குடியின பிரிவில் உள்ள முன்னாள் படை வீரர்களுக்கு 8 ஆண்டுகளும், ஒபிசி பிரிவில் உள்ள முன்னாள் படை வீரர்களுக்கு 6 ஆண்டுகளும் ஆகியோருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

சம்பளம்:

இந்த பணிக்கு மாத ஊதியமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

மேற்கண்ட பணிக்கு உடல் திறன் தேர்வு (PET), உடல் ரீதியான தரநிலைத் தேர்வு (PST), எழுத்துத் தேர்வு, ஆவணங்களின் சரிபார்ப்பு மற்றும் விரிவான மருத்துவப் பரிசோதனை (DME)/Review, மருத்துவத் தேர்வு (RME) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் என்ற https://recruitment.itbpolice.nic.in./rect/index.php இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆப்லைனில் விண்ணப்பிக்க முடியாது. முதலில் https://recruitment.itbpolice.nic.in./rect/index.php என்ற இணையதளத்தில் செல்லவும். இங்கு கான்ஸ்டபிள் (kitchen Service) என்பதை க்ளிக் செய்து அதில் உங்கள் பெயர், இமெயில் போன்ற விவரங்களை உள்ளீட்டு லாக்கின் செய்து கொள்ளவும். பின்னர், விண்ணப்ப படிவம் தோன்றும். விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்தும், ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். பின்னர், விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

Also Read: இந்து அறநிலையத்துறையில் சூப்பர் வேலை.. 8ஆம் தேர்ச்சியே போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க!

விண்ணப்ப கட்டணம்:

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். அதன்படி, பொதுப் பிரிவினர், ஆண்கள் ஆகியோர் ரூ.100 விண்ணப்ப கட்டணம் செலுத்தவும். பட்டியலின/பழங்குடியின பிரிவினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 01.10.2024 மாலை 5.50 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
Exit mobile version