5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Jobs: அரசு வேலை வேண்டுமா? – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.. என்னென்ன பணிகள் தெரியுமா?

Goverment Jobs: காலியாக உள்ள ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள், இரவு காவலர்கள், இரவு காவலருடன் கூடிய துப்புரவு பணியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பணிக்காக தகுதி உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு நேர்காணல் மூலம் நேரடி நியமன முறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jobs: அரசு வேலை வேண்டுமா? – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.. என்னென்ன பணிகள் தெரியுமா?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 10 Nov 2024 18:41 PM

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அரசின் விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில் அந்த துறையில் காலியாக உள்ள ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள், இரவு காவலர்கள், இரவு காவலருடன் கூடிய துப்புரவு பணியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பணிக்காக தகுதி உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு நேர்காணல் மூலம் நேரடி நியமன முறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களுக்கு நவம்பர் 11 ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர்

2 ஓட்டுநர் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டாயம் இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 19,500 முதல் 71,900 வரை பணிக்காலத்தில் ஊதியமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலக உதவியாளர்

இந்த பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 காலி பணியிடங்கள் உள்ள நிலையில் ரூ.15, 700 முதல் ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு காவலர்

தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 2 பணியிடங்கள் உள்ள நிலையில் ரூ. 15,700 முதல் ரூ.58,100 வரை ஊதிய விகிதம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

துப்புரவு பணியாளர்

2 காலி பணியிடங்களுக்கு தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்த துப்புரவு பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

இரவு காவலுடன் கூடிய துப்புரவு பணியாளர்

ஒரே ஒரு காலி பணியிடம் இந்த பிரிவில் உள்ளது. தமிழில் நன்கு எழுத படித்த தெரிந்திருக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கும் ரூ15,700 முதல் ரூ.58,100 வரை ஊதிய விகிதம் இருக்கும்.

வயது வரம்பு

பொது பிரிவினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர், பிரிவினருக்கும் (அனைத்து பிரிவினருக்கும்) குறைந்தபட்ச வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பொது பிரிவினருக்கு 32, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 34, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் ஆதரவற்ற விதவை ஆகியோருக்கு 37 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் முன்னாள் படை வீரர்களுக்கு வயது வரம்பு 53 ஆகவும், மாற்றுத் திறனாளிகளுக்கு உச்ச வயதுவரம்பு 10 வரையும் தளர்வு உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோவை மதுரை ஆகிய இடங்களில் இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

Also Read: TN Goverment: தமிழக இளைஞர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. அரசு தரும் மாதம் ரூ.5,000… தகுதிகள் என்ன?

பணி நிலைகள்

  • மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்கள் தேவை மற்றும் அவசியத்திற்கு ஏற்ப நீதிமன்ற அலுவலக பணிகள், நீதிபதிகளின் வீட்டுப் பணிகளான சமைத்தல், பாத்திரங்களை தூய்மைப்படுத்துதல், துணி துவைத்தல், தரையை சுத்தம் செய்தல், கழிப்பறையை சுத்தம் செய்தல், தேவைப்படும் இடங்களில் கிருமி நாசினி தெளித்தல் மற்றும் தோட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்ட நபர்கள் நீதிபதிகளின் அறைகள், நீதிமன்ற அறைகள், நீதிமன்ற அலுவலக அறைகள் மற்றும் நீதிமன்ற வளாகம் பதிவுத்துறை மற்றும் நீதிமன்றம் சார்ந்த அனைத்து இடங்களையும் சுத்தப்படுத்த வேண்டும். அதில் அடங்கிய உபகரணங்கள் மற்றும் வாகனங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
  • நீதிமன்ற வளாகங்களில் உள்ள கூரைகள், சுவர்கள் மற்றும் மரச் சாமான்களில் இருக்கும் சிலந்தி வலைகளை நீக்க வேண்டும்.
  • இரவு காவலர் பணிக்கு நியமனம் செய்யப்படுபவர்கள் நீதிமன்ற வளாகத்தை இரவு நேரங்களில் காவல் காக்க வேண்டும். நீதிபதிகள் அறைகள் மற்றும் நீதிமன்ற அலுவலகங்களை அலுவலக நேரத்திற்கு முன்பும், பின்பும், திறப்பது, மூடுவது கண்காணிப்பது மற்றும் காவல் பணியை மேற்கொள்வது என அனைத்தையும் செய்ய வேண்டும்.
  • மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் தங்கள் மேலதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி அனைத்து பணிகளையும் விடுமுறை நாட்களிலும் பணி நேரம் கடந்த நிலையிலும் அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் எந்தவித தொற்றுநோய் இல்லாமலும் இருக்க வேண்டும். அதைப்போல் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் எந்த நேரத்திலும் நிர்வாக காரணங்கள் மற்றும் தேவை நிமித்தமாக சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களுக்கு பணி மாற்றம் செய்யப்படுவார்கள்.

Also Read: வங்கியில் வேலை.. கை நிறைய சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

விண்ணப்பிக்கும் முறை

  • தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயவிவரங்கள் மற்றும் இதர விபரங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு என்ற  https://ctd.tn.gov.in/documents/10184/10937/stat.pdf/58044552-0112-4388-b732-3e08e68d83a9 இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களுடன் கல்வி தகுதி சான்றிதழ்கள் மற்றும் இதர சான்றிதழ்களின் நகலை இணைக்க வேண்டும். குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு பதிவு, சாதிச்சான்று, கல்வி மாற்றுச்சான்று, மதிப்பெண் சான்று ஆகியவற்றை சுயசான்று கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். உரிய சான்றிதழ்கள் இன்றி பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் போது நிராகரிக்கப்படும்.
  • பரிசீலனையிம்போது விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறு என கண்டறியப்பட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். விண்ணப்பங்களை நவம்பர் 11ம் தேதி மாலை 5.45 மணிக்குள் பதிவஞ்சல் அல்லது விரைவு தபால் மூலமாக மட்டுமே கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின்னர் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
  • விண்ணப்பங்களை “தலைவர், தமிழ்நாடு விற்பனை மேல்முறையீட்டு தீர்ப்பாயம், இரண்டாம் தளம், மாநகர உரிமையியல் நீதிமன்ற கட்டிடம், சென்னை 14” என்ற முகவரிக்கு அனுப்பவும்.
  • ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கும் விண்ணப்பிப்பவர்கள் அதற்கான சான்றிதழுடன் தனித்தனி விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News