இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி.. எழுத்து தேர்வு இல்லை.. மாதச் சம்பளம் ரூ.1,22,000!

Indian Oil Recruitment 2024: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பணிக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. மாதம் சம்பளமாக ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் வரை வழங்கப்படும்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி.. எழுத்து தேர்வு இல்லை.. மாதச் சம்பளம் ரூ.1,22,000!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி

Published: 

21 Nov 2024 16:31 PM

அஸ்ஸாம் மாநில தலைநகர் குவகாத்தியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் சுத்திகரிப்பு மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையில் தற்போது பணி வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது, மருத்துவமனையில் காலியாக உள்ள கேசுவாலிட்டி டியூட்டி மெடிக்கல் ஆபிசர் (சிடிஎம்ஓ) பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணிக்கு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நவ. 26, 2024ஆம் தேதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் எம்.பி.பி.எஸ் மருத்துவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், எம்.பி.பி.எஸ் பட்டத்துடன் டிப்ளமோ அல்லது முதுகலை (எம்டி/எம்எஸ்) தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இதுமட்டுமின்றி, விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். இன்டர்ன்ஷிப்பை தவிர்த்து குறைந்தபட்சம் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படிங்க: சவூதி அரேபியாவில் நர்ஸ் ஆக பணிபுரிய விருப்பமா? இது உங்களுக்குதான்!

சம்பள விவரம்

எம்.பி.பி.எஸ் : மாதம் ரூ. 1,05,200
டிப்ளமோவுடன் எம்.பி.பி.எஸ் : மாதம் ரூ.1,14,100
எம்.பி.பி.எஸ் உடன் எம்டி/எம்எஸ் (முதுகலை): மாதம் ரூ.1,22,900

பணி இடங்கள்

விண்ணப்பதாரர்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். மொத்தம் இரு பணி இடங்கள் உள்ளன.

நேர்காணல் தேதி, நேரம்

மருத்துவர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் நவ.26, 2024 காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடத்தப்படும்.

நேர்காணல் நடைபெறும் இடம்

துணை பொது மேலாளர் (HSE-மருத்துவம்),
கவுகாத்தி சுத்திகரிப்பு மருத்துவமனை,
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்,
கம்ரூப் மெட்ரோ மாவட்டம்
நூன்மதி அஞ்சல்
கவுகாத்தி – 781020

இதையும் படிங்க : கிழக்கு ரயில்வே ஆட்சேர்ப்பு.. 60 பணியிடங்கள்.. உடனே முந்துங்க!

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?