MTC Chennai: ஐடிஐ மாணவர்களே.. உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி வேண்டுமா?

Jobs Opportunities: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஐடிஐ முடித்த மாணவர்களுக்காக அவ்வப்போது வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்புகளை தனது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது  தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024-2025 ஆம் ஆண்டிற்கு மாதம் ரூபாய் 14 ஆயிரம் உதவித்தொகையுடன் ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MTC Chennai: ஐடிஐ மாணவர்களே.. உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி வேண்டுமா?

கோப்பு புகைப்படம்

Published: 

11 Sep 2024 16:30 PM

வேலைவாய்ப்பு: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஐடிஐ முடித்த மாணவர்களுக்காக அவ்வப்போது வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்புகளை தனது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது  தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024-2025 ஆம் ஆண்டிற்கு மாதம் ரூபாய் 14 ஆயிரம் உதவித்தொகையுடன் ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு 26.09.2024 அன்று மாநகர் போக்குவரத்து கழக தொழிற் பயிற்சி பள்ளி குரோம்பேட்டை நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம்.நகர போக்குவரத்து கழகத்தில் ஒரு வருடம் ஐடிஐ தொழில் பழகுனர் பயிற்சி பெற மெக்கானிக் மோட்டார் வாகனம், மெக்கானிக் டீசல், எலக்ட்ரீசியன், ஆட்டோ எலக்ட்ரிசியன், பிட்டர், டர்னர், பெயிண்டர் மற்றும் பில்டர் ஆகிய ஐடிஐ பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சிக்கு தகுதியான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பக்கத்தை பின் தொடரவும்.

இதையும் படிங்க: இந்து அறநிலையத்துறையில் சூப்பர் வேலை.. 8ஆம் தேர்ச்சியே போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க!

பிறதுறைகளில் வேலை வாய்ப்பு

  • இந்தியாவிலேயே அதிக ஊழியர்களை கொண்ட பொதுத்துறை நிறுவனமாக செயல்படும் ரயில்வேயில் காலியாக உள்ள 11,558 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சீப் கமர்ஷியல், டிக்கெட் மேற்பார்வையாளர் பணிக்கு 1,735 பணியிடங்கள் காலியாக உள்ளன.ஸ்டேஷன் மாஸ்டர் ஆகிய பிரிவுகளில் 994 இடங்கள் காலியாக உள்ளது. மேலும் சரக்கு ரயில் மேலாளர் பணிக்கு 3,144 இடங்களும், ஜூனியர் கிளார்க், டைப்பிஸ்ட் பணிக்கு 1,057 பணியிடங்களும், சீனியர் ஜூனியர் கிளார்க், டைப்பிஸ்ட் டைப்பிஸ்ட் பணிக்கு 732 பணியிடங்களும், கமர்ஷியல் டிக்கெட் கிளார்க் பணிக்கு 2,022 பணியிடங்களும், கணக்கு எழுத்தர் தட்டச்சர் பணிக்கு 361 பணிடங்களும் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட பணியிடங்களுக்கு 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும் எனவும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொது பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Tirunelveli: பள்ளிக்கு அரிவாள் கொண்டு வந்த மாணவன்.. காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்!

  • இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 4 ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடத்திற்கு எதாவது ஒரு பள்ளியில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருடம் ஓட்டுநர் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிடத்திற்கு வயது வரம்பானது 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். அதேபோல 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.9,250 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான ஆவணங்களை இணைத்து அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Apple Airpod 4 : தலையை அசைத்தால் மட்டும் போதும்.. Call Attend செய்யலாம்.. ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4-ன் அசத்தல் அம்சங்கள்!

  • இந்து சமய அறநிலையத்துறை இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பின்பு அதில் கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து தபால் மூலம் உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு நகர் வட்டம், நாமக்கல் மாவட்டம் – 637211 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?