5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

டிகிரி முடித்தவரா? அரசு மருத்துவமனையில் வேலை.. மாதம் ரூ.30,000 சம்பளம்.. உடனே பாருங்க!

Karur Hospital Recruitment : கரூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிகிரி முடித்தவரா? அரசு மருத்துவமனையில் வேலை.. மாதம் ரூ.30,000 சம்பளம்.. உடனே பாருங்க!
மருத்துவமனையில் வேலை
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 25 Nov 2024 15:33 PM

தமிழ்நாட்டில் மாவட்ட ரீதியாக மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியாகும். அந்த வகையில், தற்போது, கரூர் மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பப்படுகின்றன. அதாவது, தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் உள்ள இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகத்தின் கீழ் இயங்கிவரும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், ஓமியோபதித்துறையின் குழ் இயங்கி வரும் ஆயுஷ் தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்கள், மாவட்ட காசநோய் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள், துணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம், திருச்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் கீழ ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது.

பணி விவரம்:

கரூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆடியோலஜிஸ்ட், ஆயுஷ் மருத்துவர், சிகிச்சை முறை உதவியாளர் (பெண்கள்), மாவட்ட ஒருங்கிணைப்பாளர், லேப் டெக்னீஷியன், RMNCH கவுன்சிலர் ஆகிய பணிகளுக்கு தலா ஒரு இடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும், உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

ஆடியோலஜிஸ்ட் பணிக்கு BSC Audilogist முடித்திருக்க வேண்டும். ஆயுஷ் மருத்துவர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BSMS முடித்திருக்க வேண்டும். மேலும் அதற்கான பதிவு செய்திருக்க வேண்டும். சிகிச்சை முறை உதவியாளர் பணிக்கு Nursing therapy படிப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு ஏதேனும் ஒரு படிப்பில் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட துறையில் 1 ஆண்டு அனுபவம் இருப்பதோடு, இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும. லேப் டெக்னீஷன் பணிக்கு டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Also Read: ரயில்வே லோகோ பைலட் ஹால் டிக்கெட் வந்தாச்சு.. இப்படி டவுன்லோடு பண்ணுங்க!

RMNCH கவுன்சிலர் பணிக்கு Social work, public admininistration, sociology, home science ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வயது விவரம்

ஆடியோலஜிட் பணிக்கு 20 முதல் 35 வயது வரையும், ஆயுஷ் மருத்துவர் மற்றும் சிகிச்சை முறை உதவியாளர் பணிக்கு அதிகபட்சமாக 59 வயது வரையும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் லேப் டெக்னீஷியன் பணிக்கு 65 வயது வரையும், RMNCH கவுன்சிலர் பணிக்கு 35 வயது வரையும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சம்பளம்

ஆடியோலஜிட் பணிக்கு மாத சம்பளமாக ரூ.23,000, ஆயுஷ் மருத்துவர் பணிக்கு ரூ.40,000, சிகிச்சை முறை உதவியாளர் பணிக்கு ரூ.15,000, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு ரூ.26,500, லேப் டெக்னீஷியன் பணிக்கு ரூ.13,000, RMNCH கவுன்சிலர் பணிக்கு ரூ.18,000 வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கண்ட பணிகளுக்கு கல்வித்தகுதி மற்றும அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேர்காணல் மூலம் பணிக்கு அமர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது என்றும் பணியில் சேருவதற்கான சுய விருப்ப கடிதம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://karur.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் இருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும், நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் கேட்கப்பட்ட நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

Also Read : IBPS வங்கி அதிகாரி தேர்வு அட்மிட் கார்டு ரெடி.. எப்படி டவுன்லோடு செய்வது?

அனுப்ப வேண்டிய முகவரி

நிர்வாக செயலாளர்/மாவட்ட சுகாதார அலுவலகம்,
மாவட்ட நல வாழ்வு சங்கம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
கரூர் மாவட்டம், கரூர் – 639 007

என்ற முகவரிக்கு வரும் டிசம்பர் 5ஆம் தேதி  மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Latest News