Naan Mudhalvan Scheme: ஜெர்மனியில் செம்ம வேலை.. செவிலியர்களுக்கு இலவச விசா, டிக்கெட்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் பள்ளி முடித்த மாணவர், மாணவிகள் பொருளாதார தடையின்றி மேற்படிப்பை படித்து வருகின்றனர். மேலும், கல்லூரியில் படிக்கும்போதே வேலை வாய்ப்பை அளிக்கும் வகையிலும் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் பள்ளி முடித்த மாணவர், மாணவிகள் பொருளாதார தடையின்றி மேற்படிப்பை படித்து வருகின்றனர். மேலும், கல்லூரியில் படிக்கும்போதே வேலை வாய்ப்பை அளிக்கும் வகையிலும் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் ‘நான் முதல்வன் திட்டம்’. இந்தி திட்டத்தின் மூலம் கல்லூரி முதல் வேலைவாய்ப்பு வரை பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது நான் முதல்வர் பினிஷிங் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது ஜெர்மனியில் செவிலியர்கள் பணியில் சேர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. எனவே, இதற்கான தகுதிகள், சம்பளம் போன்ற விவரங்களை பார்ப்போம்.
Also Read: 10ஆம் வகுப்பு தேர்ச்சியா? மாதம் ரூ.70,000 சம்பளம்.. சூப்பரான வேலை!
பணி விவரம்:
நான் முதல்வன் பினிஷிங் பள்ளி என்பது இளைஞர்களுக்கு அந்தந்த துறைகளில் வேலை வாய்ப்பு உருவாக்குவதாகும். மாணவர்களின் படிக்கும் அந்தந்த துறைகளில் அவர்களுக்கு பயிற்சி வழங்கி மாணவர்களின் திறன்களை மேற்படுத்த இந்த பினிஷிங் பள்ளி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக தரத்தில் பயிற்சி வழங்குவதோடு, வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சிக்கான சான்றிதழ்களும் மாணவர்களுக்கு வழங்கப்படும். அந்த வகையில், நான் முதல்வன் பினிஷிங் பள்ளி மற்றும் ஜெர்மன் மொழி மையம் மூலம் ஜெர்மனியில் செவிலியர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Naan Mudhalvan Finishing school Good opportunities for youngsters@CMOTamilnadu @mkstalin @mp_saminathan @udhay_stalin @naan_mudhalvan#TNDIPR #TNMediahub #CMMKStalin #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu pic.twitter.com/GhchYiY82N
— TN DIPR (@TNDIPRNEWS) September 13, 2024
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி அல்லது GMN முடித்து இருக்க வேண்டும். இந்த பணிக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது விவரம்:
இந்த பணிக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். உரிய அனுபவத்துடன் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
சம்பளம்:
நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்று ஜெர்மனியில் செவிலியர் வேலைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாத சம்பளமாக 2300 யூரோ முதல் 3300 யூரோ வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் மாத சம்பளமாக ரூ.3 லட்சம் மேல் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: அரசு வேலை.. கை நிறைய சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!
கூடுதல் சலுகைகள்:
செவிலியர் பணிக்காக ஜெர்மனி செல்வோருக்கு விசா மற்றும் விமான டிக்கெட் இலவசமாக ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல துறை சார்ந்த பயிற்சி வகுப்பு ஜெர்மனி மொழி கற்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையத்தை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.