5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

போட்டி தேர்வர்களுக்கு அரசின் இலவச பயிற்சி.. ஈஸியா விண்ணப்பிக்கலாம்.. எப்படி தெரியுமா?

2024-2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் உரையில், மத்திய பணியாளர் தேர்வாணையம், இரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக "நான் முதல்வன் SSC cum RAILWAYS மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா உறைவிடப் பயிற்சியினை" துவங்கவுள்ளது.

போட்டி தேர்வர்களுக்கு அரசின் இலவச பயிற்சி.. ஈஸியா விண்ணப்பிக்கலாம்.. எப்படி தெரியுமா?
நான் முதல்வன் திட்டம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 17 Jun 2024 11:38 AM

நான் முதல்வன் திட்டம்: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், வங்கி மற்றும் ரயில்வே துறைகளின் போட்டித் தேர்வுகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகின. இந்த நிலையில், போட்டித் தேர்வுகளில் வெற்ற பெற அதற்காக தயாராகுவதற்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது கடந்தாண்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும், சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி அன்று துவங்கி வைத்தார். அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

 போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி:

இந்நிலையில் 2024-2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் உரையில், மத்திய பணியாளர் தேர்வாணையம், இரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக “நான் முதல்வன் SSC cum RAILWAYS மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா உறைவிடப் பயிற்சியினை” துவங்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யாரெல்லாம் சேரலாம்?

நான் முதல்வன் திட்டத்தின் பயற்சி வகுப்புகளுக்கு சேர அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து எதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பயிற்சிகளுக்கு ரயில்வே பயிற்சி பெறுபவர்கள் 300 பேரும், வங்கி பயிற்சி பெறுபவர்கள் 700 பேரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதற்கு 14.07.2024 அன்று இருவேறு நுழைவு தேர்வுகள் நடைபெறும். அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் இருக்கும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வங்கித் தேர்வுக்களுக்கான பயிற்சி அல்லது SSC cum RAILWAYS தேர்வுக்களுக்கான பயிற்சி, இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடியும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 29 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 02.08.1995-க்கு முன் பிறந்தவராக இருக்கக் கூடாது. அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் , https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 23.06.2024

இது தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைப்பேசி எண் 9043710214, 9043710211 ஆகும்.

மின்னஞ்சல் முகவரி – nmssc_banking@naanmudhalvan.in