Naan Mudhalvan Scheme: ஜெர்மனியில் செவிலியர் வேலை.. அரசு தரும் இலவச மொழி பயிற்சி.. விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
நான் முதல்வன் திட்டம்: நான் முதல்வன் திட்டம் திட்டத்தின் கீழ் தற்போது ஜெர்மனியில் செவிலியர்கள் பணியில் சேர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான ஜெர்மன் மொழி பயிற்சியை தமிழக அரசு இலவசமாக கற்றுத் தருகிறது. எனவே, இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களின் மூலம் பள்ளி முடித்த மாணவர்கள், பொருளாதார தடையின்று மேற்படிப்பை தொடர்ந்து வருகின்றனர். அதேபோல, பல்வேறு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றனர். அதில் ஒன்று தான் ‘நான் முதல்வன் திட்டம்’. இந்த திட்டத்தின் மூலம் கல்வி முதல் வேலைவாய்ப்புகள் வரை அனைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு இல்லாமல் வெளிநாட்டிலும் தமிழர்கள் வேலை செய்யும் வகையில், அந்த நாட்டுக்கான மொழி பயிற்சியும் தமிழக அரசு இந்த திட்டம் மூலம் வழங்கி வருகிறது.
அந்த வகையில், இந்த திட்டத்தின் கீழ் தற்போது ஜெர்மனியில் செவிலியர்கள் பணியில் சேர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கான ஜெர்மன் மொழி பயிற்சி இலவசமாக கற்றுத் தரப்படுகிறது.
பணி விவரம்:
நான் முதல்வன் பினிஷிங் பள்ளி என்பது இளைஞர்களுக்கு அந்தந்த துறைகளில் வேலை வாய்ப்பு உருவாக்குவதாகும். மாணவர்களின் படிக்கும் அந்தந்த துறைகளில் அவர்களுக்கு பயிற்சி வழங்கி மாணவர்களின் திறன்களை மேற்படுத்த இந்த பினிஷிங் பள்ளி கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் தற்போது ஜெர்மனியில் செவிலியர் பணிபுரிவதற்கு ஏதுவாக, அவர்கள் ஜெர்மன் மொழி பயிற்சி வழங்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி அல்லது GMN முடித்து இருக்க வேண்டும். இந்த பணிக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: அரசு மருத்துவமனையில் வேலை.. மாதம் ரூ.35,000 சம்பளம்.. யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்?
வயது விவரம்:
இந்த பணிக்கு உரிய அனுபவத்துடன் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சம்பளம்:
நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்று ஜெர்மனியில் செவிலியர் வேலைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாத சம்பளமாக 2300 யூரோ முதல் 3300 யூரோ வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் மாத சம்பளமாக ரூ.3 லட்சம் மேல் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் சலுகைகள்:
செவிலியர் பணிக்காக ஜெர்மனி செல்வோருக்கு விசா மற்றும் விமான டிக்கெட் இலவசமாக ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல துறை சார்ந்த பயிற்சி வகுப்பு ஜெர்மனி மொழி கற்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள் சேர்பவர்களுக்கு சரியான தங்கும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: மாதம் ரூ.25,000 சம்பளம்.. அரசு மருத்துவமனையில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!
பயிற்சி தொடங்கும் நாள்:
ஜெர்மன் மொழி பயிற்சி நவம்பர் 1ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. ஒரு நாளில் 8 மணி நேரம் வகுப்புகள் இருக்கும் என்றும் வாரத்தில் 8 நாட்கள் வகுப்புகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
வகுப்பு நடைபெறும் இடம்:
பயிற்சி வகுப்புகள் திருச்சி, சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.